• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிகேடா நிறுவனத்தின் ‘க்யூடெங்கா (டிஏகே-003)’ இந்தியாவில் ஒப்புதல் பெற்ற முதல் டெங்கு தடுப்பூசி ஆனது

July 20, 2026 தண்டோரா குழு

டிகேடா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்.நிறுவனம்,4 முதல் 60 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு டெங்கு நோயைத் தடுப்பதற்கான டிகேடா -வின் டெங்கு தடுப்பூசியான க்யூடெங்கா -விற்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் சந்தை அங்கீகாரத்தை புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் டெங்கு தடுப்பூசி க்யூடெங்கா ஆகும்; மேலும்,இதற்கு முன்பு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததா என்பதை அறியும் தடுப்பூசிக்கு முந்தைய பரிசோதனை தேவையின்றி, யார் வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த நோய் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார சவாலாக இருக்கும் இந்தியாவில், டெங்கு தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதில் இந்த ஒப்புதல் ஒரு முக்கியமான படியாகும்.

டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும்,இது 125-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி,உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இன்டர்காண்டினென்டல் மார்க்கெட்ஸ் பிரிவின் தலைவர் டாக்டர் எம்.நாயக் கூறுகையில்,

“டெங்கு என்பது அதிகரித்து வரும் ஒரு பொது சுகாதார சவாலாகும், மேலும் இந்தியாவிற்கு ஆதாரப்பூர்வமான, நீடித்த தடுப்பு நடவடிக்கை தேவைப்படுகிறது. க்யூடெங்கா -விற்கான சமீபத்திய ஏழு ஆண்டுகால தரவுகள், நான்கு வகையான செரோடைப்களிலும் டெங்கு தொற்று மற்றும் மருத்துவமனை அனுமதிக்கு எதிராக தொடர்ச்சியான பாதுகாப்பைக் காட்டுகின்றன.

2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, க்யூடெங்கா 43 நாடுகளில் ஒப்புதல் பெற்றுள்ளது, உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.இந்த ஒப்புதல் இந்தியாவில் டெங்கு தடுப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான முன்னோடிப் படியாகும். என்று கூறினார்.இந்தியாவில் இந்த ஒப்புதலானது, பாதிப்புள்ள மற்றும் பாதிப்பில்லாத பிராந்தியங்களில் 28,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 19 கட்டம் 1, 2 மற்றும் 3 மருத்துவ பரிசோதனைகளைக் கொண்ட டிகேடா-வின் உலகளாவிய மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

எட்டு நாடுகளில் 20,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் நீண்ட காலத்திற்கு தடுப்பூசியை மதிப்பீடு செய்தது. இரண்டாவது டோஸைத் தொடர்ந்து 12 மாதங்களில்,இந்த ஆய்வு அதன் முதன்மை இலக்கை எட்டியது, வைரஸ் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட டெங்குவிற்கு எதிராக 80.2% ஒட்டுமொத்த தடுப்பூசி செயல்திறனை நிரூபித்தது. 18 மாதங்களில், இந்த ஆய்வு டெங்கு தொடர்பான மருத்துவமனை அனுமதிக்கு எதிராக 90.4% செயல்திறனைக் காட்டியது, இது ஆய்வின் முக்கிய இரண்டாம் நிலை இலக்கை எட்டியது.

4.5 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு டோஸ் க்யூடெங்கா டெங்கு தொடர்பான மருத்துவமனை அனுமதிகளைத் தடுப்பதில் 84.1% தடுப்பூசி செயல்திறனை வழங்கியது. குறிப்பாக, இந்த தடுப்பூசி நான்கு வகையான டெங்கு வைரஸ் செரோடைப்களிலும் ஏழு ஆண்டுகள் வரை நீடித்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் காட்டியுள்ளது.இந்த ஒப்புதல், 4-60 வயதுடைய நபர்களிடம் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பீடு செய்த, இந்திய பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட கட்டம் III மருத்துவ பரிசோதனை தரவுகளாலும் ஆதரிக்கப்படுகிறது.நிஜ உலக சான்றுகள் மற்றும் தொடர்ச்சியான பார்மகோவிஜிலென்ஸ் ஆகியவற்றால் மேலும் ஆதரிக்கப்படுகின்றன.

க்யூடெங்கா என்பது நான்கு வகையான டெங்கு வைரஸ் செரோடைப்களுக்கும் எதிராக பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு டெட்ராவலன்ட், லைவ்-அட்டெனுவேட்டட் வீரியம் குறைக்கப்பட்ட நேரடி வைரஸ் தடுப்பூசி ஆகும்.

மேலும் படிக்க