July 22, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான யூரோகிட்ஸ் ப்ரீஸ்கூல் 18 முதல் 24 மாதங்களுக்குட்பட்ட (ஒன்றரை முதல் இரண்டு வயது) குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ‘ஜூனியர் பிளேகுரூப்’ என்ற கற்றல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
குழந்தைகளின் வளர்ச்சியில் மிக முக்கியமான இந்த காலகட்டத்தை ஆதரிக்கும் வகையில், சிறப்பான பாடத்திட்டம்,நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்பான சூழலுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவில்,முறையான ப்ரீஸ்கூல் கல்வி என்பது குழந்தைகளுக்கு இரண்டரை அல்லது மூன்று வயதில் தான் தொடங்குகிறது.
இந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில், குழந்தைகளின் வயது மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற சரியான கற்றல் சூழலை ‘ஜூனியர் பிளேகுரூப்’ உருவாக்குகிறது. சிறு வயதிலேயே படிப்பைத் திணிக்காமல், குழந்தைகளின் தகவல் தொடர்பு திறன், உடல் இயக்கம், புதிய விஷயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம், உணர்வுபூர்வமான பாதுகாப்பு மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றை சுவாரஸ்யமான அனுபவங்கள் மூலம் வளர்ப்பதில் இத்திட்டம் முக்கிய கவனம் செலுத்துகிறது.இன்றைய பெற்றோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ‘ஜூனியர் பிளேகுரூப்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
லைட்ஹவுஸ் லேர்னிங் (யூரோகிட்ஸ்) நிறுவனத்தின் ப்ரீ-கே பிரிவின் தலைமை செயல் அதிகாரி கே.வி.எஸ். சேஷசாய் இது குறித்து கூறுகையில்,” இந்த ‘ஜூனியர் பிளேகுரூப்’ திட்டம் மூலம், இந்தியாவில் குழந்தைகளின் ஆரம்பகால கற்றல் முறையில் உள்ள இடைவெளியை நாங்கள் நிரப்புகிறோம்.சிறு குழந்தைகளுக்காகவே பிரத்தியேகமாக, பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் பிளேகுரூப் திட்டத்தின் முக்கிய அம்சமாக 30 வாரங்கள் கொண்ட ஒரு சிறப்பான பாடத்திட்டம் உள்ளது. இதில் ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப 150 வகையான கற்றல் அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன.90 நிமிடங்கள் நடைபெறும் ஒவ்வொரு வகுப்பிலும் புலன் வழி கற்றல்,உடல் இயக்கம்,கதை சொல்லுதல்,தகவல் தொடர்பு, நடைமுறை வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் படைப்பாற்றல் செயல்பாடுகள் ஆகியவை கலந்திருக்கும்.
இது அன்றாட ஒழுக்கம், தகவல் தொடர்பு, மூளை வளர்ச்சி மற்றும் புதிய விஷயங்களை ஆராயும் ஆர்வம் ஆகிய நான்கு முக்கிய விஷயங்களில் குழந்தைகளின் அடிப்படைத் திறன்களை வளர்க்க உதவுகிறது நாடு முழுவதும் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட யூரோகிட்ஸ் மையங்களில் அறிமுகமாகும் இந்த ‘ஜூனியர் பிளேகுரூப்’ திட்டத்தில், எந்தவொரு குழந்தையின் கல்விப் பயணத்திற்கும் சரியான அடித்தளம் அமைக்க 450 தனித்துவமான கற்றல் அனுபவங்கள் உள்ளன. குறிப்பிட்ட யூரோகிட்ஸ் மையங்களில் தற்போது இதற்கான சேர்க்கை திறக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள் 20 ஜூலை 2026 முதல் தொடங்குகின்றன. இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் மாணவர் சேர்க்கைக்கு, பெற்றோர்கள் தங்கள் அருகில் உள்ள யூரோகிட்ஸ் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.