• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரண்டு மாதங்களில் 40 கத்திகளை விழுங்கிய காவலர், மருத்துவர்கள் அதிர்ச்சி

August 22, 2016 தண்டோரா குழு

கடப்பாரையை விழுங்கி கஷாயம் குடிப்பவன் என சிலரை நாம் குறிப்பிடுவது வழக்கம்.அது போல் இந்த அமிர்தசரஸ் காவல்துறை காவலர் 40 கத்திகளைக் விழுங்கியும் உயிருடன் இருப்பது பழமொழியை நிஜமாக்கியுள்ளது.

பஞ்சாபிலுள்ள அமிர்தசரஷைச் சார்ந்த ஒருவர் கடந்த இரு மாதங்களாக உணவு உண்ணுவது போல் கத்திகளை விழுங்கி வந்துள்ளார்.கத்திகளை உண்ண வேண்டும் என்ற இச்சையை அடக்க முடிவதில்லை என்பதனால் தொடர்ந்து உட்கொண்டு உயிரோடும் வளைய வந்திருக்கிறார் என்றால் அது மருத்துவர்களுக்கே விடுக்கப்பட்ட சவால் எனலாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது வயிற்றிலிருந்து 5 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் 40 கத்திகளை எடுத்துள்ளனர்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களில் இருவரான ஜிடென்ற மல்கோத்ரா,தான் இதுவரை இது போன்ற மனிதனைச் சந்தித்ததில்லை என்று கூறினார்.

இதில் முக்கியம் என்னவென்றால் 40 கத்திகளை விழுங்கிய பிறகும் உயிரோடு இருப்பது மட்டுமின்றி, அறுவை சிகிச்சையையும் தாங்கிக் குணமாகி விட்டதே என்றும்,மீண்டும் இப்பழக்கத்தைத் தொடராமல் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க