• Download mobile app
18 May 2026, MondayEdition - 3750
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உணவுக்காக 6 வயது மகளை 55 வயது ஆணுக்குத் திருமணம் செய்து வைத்த தந்தை

August 10, 2016 தண்டோரா குழு

ஆப்கானிஸ்தானில் உணவுக்காகத் தனது 6 வயது மகளை 55 வயது ஆணுக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் கோர்ஸ் மாகாணத்தில் உள்ள பிரோஸ்கோ என்னும் இடத்தில் ஆடு மற்றும் சில உணவுகளுக்காகத் தனது 6 வயது மகளை 55 வயது ஆணுக்கு அவரது தந்தையே திருமணம் செய்து வைத்துள்ளார். கரிப்கோல் எனும் 6 வயது சிறுமியை சையத் அப்துல் கரீம் எனும் 55 வயது ஆணுக்குச் சிறுமியின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இத்திருமணத்திற்கு ஈடாக ஆடு, அரிசி, டீ தூள், எண்ணெய் மற்றும் சர்க்கரையை அவர் பெற்றுள்ளார்.சிறுமியின் உறவினர் திருமணம் நடந்தை அறிந்து சில மணி நேரங்களில், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவரது தந்தையும், மணம் செய்து கொண்ட சையத் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

தனது குடும்பத்திற்கு உணவு அளிக்க முடியாத காரணத்தினால் தான் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவரது தந்தை கூறியுள்ளார். மேலும், சிறுமி 18 வயதை எட்டிய பிறகே, 55 வயது சையத் உடலுறவு கொள்வதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற சையத், அன்று இரவு சிறுமியின் ஆடைகளைக் களைய முயற்சித்ததாக சில சாட்சியங்கள் கூறுகின்றன. இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமி தற்போது அவரது தாயிடம் பத்திரமாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க