• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்டப்பஞ்சாயத்து செய்வதாக டி.எஸ்.பி மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

October 22, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் நிலத்தகராறில்,டி.எஸ்.பி கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும்,சம்மந்தப்பட்ட நில உரிமையாளரை காணவில்லை எனவும்,அவரை கண்டுபிடித்து தரக் கோரியும்,டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கரவழி மாதபூரை சேர்ந்த சென்னியப்பன் என்பவருக்கு,அந்த பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருடன் நிலப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக கருமத்தம்பட்டி டி.எஸ்.பி பாஸ்கரன் தொடர்ந்து கட்டப் பஞ்சாயத்து செய்து சென்னியப்பனை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று டி.எஸ்.பி அலுவலகத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறி சென்னியப்பனை அழைத்து சென்றதாகவும்,ஆனால் இதுவரை வீடு திரும்பாததால் அவரை காண்டுபிடித்து தரக் கூறி,சென்னியப்பனின் உறவினர்கள் கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் புகார் மனு அளித்தனர்.மேலும் நிலத் தகராறில் டி.எஸ்.பி பாஸ்கரன் தொடர்ந்து கட்டப் பாஞ்சாயத்து செய்து மிரட்டி வருவதாகவும்,எனவே அவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க