• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2 மாதங்களில் 39 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு – ரூ.13.95 லட்சம் அபராதம் விதிப்பு

June 9, 2023 தண்டோரா குழு

கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இதுவரை 10 குழந்தை தொழிலாளர் மற்றும் 29 வளரிளம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பணிக்கு அமர்த்திய உரிமையாளர்களுக்கு ரூ. 13 லட்சத்து 95 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாவட்டமாக மாற்ற முழு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பை தர வேண்டும். குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனத்தின் மீது குறைந்தபட்சம் ரூ. 20 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இதுவரை 10 குழந்தை தொழிலாளர் மற்றும் 29 வளரிளம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இவர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளர்கள் மீது மொத்தம் ரூ.13 லட்சத்து 95 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் வரும் 12-ம் தேதி அன்று அனுசரிக்கப்படவுள்ளது.அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வணிக நிறுவனங்கள்,உணவு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் விளம்பரபலகைகள் வைத்தும்,உறுதிமொழி எடுத்தும்,கையெழுத்து இயக்கம் நடத்தியும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க