• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரமடை பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் கைது

December 18, 2024 தண்டோரா குழு

காரமடை பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து 3 சவரன் தங்க நகை மற்றும் 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்.

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் வசிக்கும் கண்ணம்மா(75) கடந்த 07.12.2024 அன்று தனது மகன் வீட்டின் முன்பு இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கண்ணம்மாவின் கழுத்திலிருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் காரமடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன். உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் அப்துல் சமது (35) மற்றும் நவ்ஷத் மகன் நிஷாத் (32) ஆகியோர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

இந்நிலையில் தனிப்படையினர் மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 3 சவரன் தங்க நகை மற்றும் 1இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212‌ மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க