• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

108 ஆம்புலன்ஸில் பிரசவம் : தாய், சேய் நலம்

May 9, 2023 தண்டோரா குழு

கோவை தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.இவரின் மனைவி அனுசுயா (21). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை வீட்டில் இருக்கும்பொழுது பிரசவ வலி ஏற்பட்டு மிகுந்த வலியுடன் துடித்து வந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சாய்பாபா காலனி இருந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வீட்டில் சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே வந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தமிழகன், பைலட் சக்தி குமார் உதவியுடன் பிரசவம் பார்த்தனர்.

இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர் களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க