August 27, 2026
தண்டோரா குழு
வாடிக்கையாளர்களுக்கு விரைவான, டிஜிட்டல் மற்றும் சுலபமான கடன் வசதியை வழங்க, கோவை கவுண்டம்பாளையம் மற்றும் நேரு நகரில் புதிய கிளைகளை எச்டிபி பைனான்ஸ் துவக்கி உள்ளது.
வாடிக்கையாளர்களின் முக்கிய தேவைகளான சுலபமாக திருப்பிச் செலுத்தும் வசதி, தங்கத்திற்கு அதிக கடன் தொகை மற்றும் விரைவான சேவை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களின் வருமானத்திற்கு ஏற்ப கடன் காலத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளும் வசதி இங்கு உள்ளது.
வியாபாரத் தேவைக்காகவோ அல்லது நீண்ட கால வீட்டுத் தேவைக்காகவோ தங்களுக்கு ஏற்ற கடன் கால அளவை வாடிக்கையாளர்களே சுலபமாக தேர்ந்தெடுக்கலாம். மேலும் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் நிலையான வருமானம் உள்ளவர்களுக்கு எளிய மாதத் தவணை திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பெரிய கடன் தொகையையும் எளிதாக மாதம் மாதம் பிரித்து செலுத்த முடியும். வியாபாரிகள் மற்றும் சீரான வருமானம் இல்லாத வணிகர்களுக்காக, 3 ஆண்டுகள் வரையிலான சிறப்புத் திட்டங்கள் உள்ளன.
இதன்படி, வாடிக்கையாளர்கள் கடன் காலத்தில் வட்டியை மட்டும் செலுத்திவிட்டு, கடன் முடிவடையும் போது அசலைச் செலுத்திக் கொள்ளலாம். இதனால் மாதச் செலவு பெரிய அளவில் குறையும். இந்தக் கிளைகள் தங்கத்திற்கு அதிகபட்ச கடன் தொகையை வழங்குகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது தங்கத்திற்கு ஏற்ற முழுமையான கடன் பலனைப் பெற முடியும்.
இந்த புதிய கிளைகள் துவக்கப்பட்டு இருப்பது குறித்து எச்டிபி பைனான்ஸ் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் தங்க நகை கடன் பிரிவின் தலைவர் எஸ். சத்ய ரமணன் கூறுகையில்,
“கோவை தொழில் நகரம் என்பதால் இங்கு பணத் தேவை என்பது அனைவருக்கும் அதிக அளவில் உள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப கடன் கால அளவு, பலவிதமான திருப்பிச் செலுத்தும் முறைகள், தங்கத்திற்கு அதிக கடன் தொகை, டிஜிட்டல் வசதி மற்றும் விரைவான சேவை ஆகியவற்றின் மூலம் மற்றவர்களிடம் இருந்து நாங்கள் தனித்து நிற்கிறோம்.
சிறந்த தனிப்பட்ட சேவையுடன், நகரத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எளிய, வெளிப்படையான மற்றும் நம்பகமான ஒரே தீர்வை வழங்குவதே எங்கள் நோக்கமாகும்” என்று தெரிவித்தார். ஒவ்வொரு கடனும் மிக விரைவாக வழங்கப்படும். எளிமையான, காகிதமில்லா நடைமுறைகள் பின்பற்றப்படும்.மேலும் தங்கத்தின் மதிப்பு வெளிப்படையாகக் கணக்கிடப்படுவதோடு, அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கு முழுமையான பாதுகாப்பும் வழங்கப்படும்.
மேலும் கூடுதலாக வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலமாக டிஜிட்டல் முறையில் லாகின் செய்து, எங்கிருந்தாலும் தங்களது கடன் விவரங்களை அறியலாம் மற்றும் சுலபமாகப் பணத்தைச் செலுத்தலாம்.
புதிய கிளைகள் எண். J4, காந்தி நகர், கவுண்டம்பாளையம்,(பெடரல் பேங்க் மாடியில்) மற்றும் எண். 68, முதல் தளம், நேரு நகர் மேற்கு,(முத்தூட் பைனான்ஸ் கட்டிடத்தின் அருகில்) என 2 கிளைகள் கோவையில் திறக்கப்பட்டு உள்ளன.