August 27, 2026
தண்டோரா குழு
டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 10 லட்சம் வாடிக்கையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதைத் தொடர்ந்து, உலகளவில் புகழ்பெற்ற இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ‘டிவிஎஸ் ஐக்யூப் மில்லியனர்’ சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘டிவிஎஸ் ஐக்யூப் மில்லியனர்’ அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் கம்மூட்டர் மற்றும் இவி பிஸினெஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் மற்றும் கார்ப்பரேட் பிராண்ட் & மீடியா பிரிவின் ஹெட் அனிருத்தா ஹல்தார் பேசுகையில்,
டிவிஎஸ் ஐக்யூப் மூலம் மின்சார வாகனப் பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்த 10 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை போற்றும் வகையிலும், இந்தியாவின் மிக விருப்பமான குடும்ப எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற தனது தனித்துவமிக்க நிலையை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த புதிய மில்லியனர் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐக்யூப், எலக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவில் நிறுவனத்தின் சந்தைத் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது; மேலும், இந்த ஆண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தைப் பங்களிப்பில் டிவிஎஸ் மோட்டார் முதலிடத்தைப் பிடிப்பதற்கும் டிவிஎஸ் ஐக்யூப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
மக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிரபலமான ‘டிவிஎஸ் ஐக்யூப் 3.5 கேடபிள்யூஹெச் வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மில்லியனர் ஸ்பெஷல் எடிசன் , 145 கி.மீ ஐடிசி பயண வரம்பை வழங்குகிறது. வடதுருவத்தின் மிளிரும் ஒளியால் ஈர்க்கப்பட்ட பிரத்தியேக ‘அரோரா க்ரீன் டூயல் வண்ணம், ப்ரீமியம் சீட் கவர் மற்றும் தனித்துவமான மில்லியனர்’ பேட்ஜிங் போன்ற வடிவமைப்புக் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள முன்பக்க ஸ்டோரேஜ் பெட்டி மூலம் மொத்த சேமிப்பக இடவசதியின் அளவு 32 லிட்டரிலிருந்து 35.5 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தாராளமான சேமிப்பக இடவசதி அன்றாடப் பயன்பாட்டை மேலும் எளிதாக்கியுள்ளது. மேலும், இதில் ஒருங்கிணைந்த டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 118-க்கும் மேற்பட்ட நவீன ஸ்மார்ட் கனெக்டிவிட்டி தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றுள்ளன என்றார்.
‘டிவிஎஸ் ஐக்யூப் மில்லியனர்’ எடிசன்-ன் விலை ரூ.1,40,138 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (எக்ஸ்-ஷோரூம் விலை). டிவிஎஸ் ஐக்யூப் வாகன வரிசை ரூ.1,11,310 முதல் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம் விலை);மேலும் பேட்டரி வாடகைத் திட்டத்தின் கீழ் இதன் தொடக்க விலை ரூ.59,999 ஆகும்.