October 10, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு மனை மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் குழுமம், கோயம்புத்தூரின் பீளமேடு பகுதியில் ‘ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி’ என்ற ப்ரீமியம் சொகுசு மனைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி’ வீட்டுமனைத் திட்டத்தின் அறிமுகம் குறித்து ஜி ஸ்கொயர் குழும நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் பேசுகையில்,
சுமார் 16.10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ‘ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி’ திட்டத்தில், கனவு இல்லங்களை உருவாக்க 247 அதி ஆடம்பர வில்லா மனைகளும், முதலீட்டாளர்களின் தேவைகளுக்காக 3 வணிக ரீதியிலான மனைகளும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நவீன நகர்ப்புற வாழ்க்கைக்கு ஏற்றவாறு, 100% பாதுகாப்பான மற்றும் திட்டமிடப்பட்ட ஒரு ஸ்மார்ட் செக்யூர்ட் சமூகமாக கோவையில் அமையவிருக்கிறது. பல்வேறு விதமான தனிநபர் கனவு இல்லத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ‘ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி’ திட்டமானது 1.38 சென்ட் முதல் 9.53 சென்ட் வரையிலான அளவுகளில் குடியிருப்பு மனைகளை வழங்குகிறது. மேலும், இதில் 21.76 சென்ட் முதல் 55.43 சென்ட் வரையிலான பிரத்தியேக வணிக ரீதியிலான மனைப் பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன.
கோவை மாநகரின் ‘ஹார்ட் ஆஃப் தி சிட்டி’ என்று சொல்லப்படும் பீளமேட்டின் அதிமுக்கியமான மையப் பகுதியில் அமைந்திருப்பதுதான் ‘ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி’ திட்டத்தின் மிகப்பெரிய தனிச்சிறப்பு. இத்திட்டம் பீளமேட்டின் மிகச்சிறந்த போக்குவரத்து வசதிகள் கொண்ட பகுதியில் அமைந்துள்ளதுடன், முக்கியக் குடியிருப்புப் பகுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சில்லறை வணிக வளாகங்கள் மற்றும் வாழ்க்கை முறை மையங்களுக்கு எளிதில் சென்று வரும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், சில்லறை விற்பனை நிலையங்கள், அலுவலக வளாகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வணிக நிறுவனங்களுக்கும் ஏற்ற வகையிலான ப்ரீமியம் வணிக மனைப் பிரிவுகளையும் இது வழங்குகிறது. வணிக அமைப்புகளும் முதலீட்டாளர்களும் தங்களின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்பத் தங்களின் வணிக வளாகங்களை மிகுந்த நம்பிக்கையோடும் எளிதாகவும் அமைத்துக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்பை இத்திட்டம் வழங்குகிறது.
டிடிசிபி மற்றும் ரேரா அரசு அங்கீகாரம் பெற்ற இத்திட்டம், ஜி.வி. ரெசிடென்சியிலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவிலும், எஸ்.எஸ்.வி.எம் பள்ளியிலிருந்து 700 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும், திருச்சி ரோடு 1.3 கி.மீ, பி.எஸ்.ஜி மருத்துவமனை 1.5 கி.மீ, அவிநாசி ரோடு மற்றும் ஃபன் மால் 2 கி.மீ, ரேஸ் கோர்ஸ் 3 கி.மீ தொலைவிலும், விரைவில் அமையவுள்ள ஃபீனிக்ஸ் மால் அருகிலும், கோவை சர்வதேச விமான நிலையம் 6 கி.மீ தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
அட்டகாசமான 20 உலகத்தர சொகுசு வசதிகளை இத்திட்டத்தில் வழங்கியுள்ளது ஜி ஸ்கொயர்.‘ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி’ வீட்டுமனைத் திட்ட அறிமுகத்தின் ஒரு பகுதியாக, முதல் 10 முன்பதிவுகளுக்கு ஒரு சென்ட் ரூ 39.9 லட்சம் என்ற பிரத்தியேக சிறப்பு விலையில் குடியிருப்பு மனைகள் வழங்கப்படுகின்றன. இப்பகுதியில் நிலவும் தற்போதைய விலை ஒரு சென்ட் ரூ.55 லட்சமாகவும், ஜி ஸ்கொயரின் விலை ஒரு சென்ட் ரூ.45 லட்சமாகவும் உள்ள நிலையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நிலவும் தற்போதைய விலை ஒரு சென்ட் ரூ.75 லட்சமாகவும், ஜி ஸ்கொயரின் விலை ரூ. 65 லட்சமாகவும் உள்ள வணிக மனைகள், தற்போது ஒரு சென்ட் ரூ. 59.9 லட்சம் முதல் என்ற சிறப்பு விலையில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இத்திட்டமானது மனை மற்றும் வில்லா ஒருங்கிணைந்த கவர்ச்சிகரமான வீட்டு வசதியையும் வழங்குகிறது. இதன் கீழ், தற்போதைய மதிப்பு ரூ .2.2 கோடியாக உள்ள 2 பிஹெச்கே சொகுசு வில்லாக்கள் ரூ. 99 லட்சம் முதலும், ரூ .3.2 கோடியாக உள்ள 3 பிஹெச்கே சொகுசு வில்லாக்கள் ரூ.1.49 கோடி முதலும் ஆரம்பமாகும் சிறப்பு விலையில் கட்டுமான அமைப்புகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வில்லா கட்டுமானப் பங்குதாரரான ‘பிரிக் & போல்ட்’ வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்களின் வில்லா கட்டுமானத்தில் ரூ.5 லட்சம் வரை பிரத்தியேகத் தள்ளுபடியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.