• Download mobile app
25 Nov 2026, WednesdayEdition - 3941
FLASH NEWS
  • மாற்றம் மாற்றம் என்ற முதலமைச்சர் என்ன வெங்காயம் மாற்றம் செய்தார்..? – வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி
  • திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – சௌமியா அன்புமணி வரவேற்பு
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ள ஐந்து மண்டலங்களில் சூயஸ் நிறுவனம் மரக்கன்று நடும் இயக்கத்தை நடத்தியது

November 25, 2026 தண்டோரா குழு

கோவையில் உள்ள ஐந்து மண்டலங்களில் சூயஸ் நிறுவனம் மரக்கன்று நடும் இயக்கத்தை நடத்தியது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகங்களின் உள்ளேயும் வெளியேயும் சுமார் 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நகரம் முழுவதும் பசுமை பகுதிகளை அதிகரிப்பதையும், உள்ளூர் மக்களுக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவையில் 24×7 குடிநீர் விநியோகத் திட்டத்தை சூயஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.ஐந்து மண்டலங்களை உள்ளடக்கிய இந்த இயக்கத்தில், வ.உ.சி. பூங்கா, ஹவுசிங் காலனி வடக்கு / தெற்கு, நியூ மடத்தூர், சின்னம்மாள் தெரு, பி.ஆர்.பி கார்டன், ஸ்ரேயாஸ் கார்டன், வி.கே.ஆர் நகர், ஏ.கே.எஸ் நகர் ஆகிய குறிப்பிட்ட இடங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன.

பசுமையான சுற்றுப்புறங்கள் மற்றும் ஆரோக்கியமான நகர்ப்புறச் சூழலை உருவாக்கும் வகையில் இந்த பணிகளை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டது.சூயஸ் நிறுவனத்தின் 24×7 குடிநீர் விநியோகத் திட்டத்தின் திட்ட இயக்குநர் சங்ராம் பட்நாயக் கூறுகையில், “தண்ணீர் உயிர்களின் அடிப்படை; மரங்கள் ஆரோக்கியமான சுற்றுச்சூழலின் அடிப்படை. நமது சுற்றுப்புறத்தை ஆரோக்கியமாக மாற்றுவதற்கு மரம் நடுவது ஒரு எளிமையான, ஆனால் அர்த்தமுள்ள வழியாகும்.

பசுமையான சுற்றுச்சூழல் சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, எதிர்கால சந்ததியினருக்கும் சிறந்த நன்மைகளை தரும். இந்த முயற்சியின் மூலம், பசுமையான கோவையை உருவாக்க நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம். அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவது, இந்த இலக்கை நோக்கி ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க எங்களுக்கு உதவுகிறது” என்றார்.

இந்த மரக்கன்று நடும் இயக்கம், சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் சமூக நல்வாழ்வில் சூயஸ் நிறுவனத்திற்கு உள்ள அக்கறையை காட்டுகிறது. மேலும், கோவையில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த இந்நிறுவனம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளுக்கு இது கூடுதல் வலிமை சேர்க்கும் விதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க