• Download mobile app
24 Nov 2026, TuesdayEdition - 3940
FLASH NEWS
  • மாற்றம் மாற்றம் என்ற முதலமைச்சர் என்ன வெங்காயம் மாற்றம் செய்தார்..? – வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி
  • திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – சௌமியா அன்புமணி வரவேற்பு
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்கத்தில் ரீனியம் உலோகப் பொடி கலப்பதாகப் பரவும் தகவல் வதந்தி – தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமில்லை!

November 24, 2026 தண்டோரா குழு

தங்க நகைகளில் ரீனியம் என்ற உலோகப் பொடியைக் கலப்படம் செய்வதாக சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தியானவை என்றும், தொழில்நுட்ப ரீதியாக இதுபோன்ற கலப்படம் செய்வது சாத்தியமற்றது என்றும் கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில்,:

தங்க நகைகளில் ரீனியம் என்ற உலோகப் பொடியைக் கலந்து விற்பனை செய்வதாகச் செய்திகள் பரவி வருகின்றன. இந்தத் தகவலால் பொதுமக்கள் மற்றும் தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

தங்கத்துடன் ரீனியம் போன்ற உலோகத்தைச் சேர்த்து நகை தயாரிப்பதாகக் கூறப்படுவது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. தங்கம் என்பது குறிப்பிட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட உலோகம். அதனுடன் மற்ற உலோகங்களைச் சேர்த்து நகை தயாரிக்கும்போது, அவற்றின் தன்மை, உருகும் வெப்பநிலை, கலக்கும் விகிதம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, ரீனியம் அதிக உருகுநிலையைக் கொண்ட உலோகம் என்பதால், சாதாரண தங்க நகை தயாரிப்பு முறையில் அதனைப் பொடியாகக் கலந்து, தங்கத்தின் தன்மையை மாற்றாமல் நகையாக உருவாக்குவது எளிதான காரியமல்ல.

மேலும், தங்கத்தின் தரத்தை உறுதி செய்வதற்குப் பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன. எனவே, இதுபோன்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏற்கெனவே வாங்கிய தங்க நகைகளின் தரம் குறித்து சந்தேகம் இருந்தால், அருகிலுள்ள தங்க நகைக் கடைகளுக்குச் சென்று அதன் தரத்தை இலவசமாகப் பரிசோதித்துக் கொள்ளலாம். தங்க நகை விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களைத் தீர்த்து, தங்கத்தின் தரம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

தங்கத்தில் கலப்படம் செய்வது தொடர்பாக யாரேனும் கண்டறியப்பட்டால், அவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு எங்கள் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.தங்க நகைத் தொழிலின் மீதும், விற்பனையாளர்கள் மீதும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பது அவசியம். ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி ஒட்டுமொத்த தங்க நகைத் தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க