• Download mobile app
21 Nov 2026, SaturdayEdition - 3937
FLASH NEWS
  • மாற்றம் மாற்றம் என்ற முதலமைச்சர் என்ன வெங்காயம் மாற்றம் செய்தார்..? – வி த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி
  • திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – சௌமியா அன்புமணி வரவேற்பு
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூரில் இன்று துவங்கியது ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026

November 21, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நகைக் கண்காட்சி மற்றும் விற்பனையான ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026 -இன் சிறப்புப் பதிப்பு, இன்று கோவையில் துவங்கியது.

ஒரே கூரையின் கீழ் இந்தியாவின் சிறந்த 50 நகை வடிவமைப்பாளர்கள் மற்றும் பிராண்டுகளை கண்டு ரசிக்கவும், ஷாப்பிங் செய்யவும் சிறந்த இடமாக இக்கண்காட்சி கோயம்புத்தூர் நகருக்கு மீண்டும் வந்துள்ளது. கோயம்புத்தூர், அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ், ஹோட்டலில் இன்று 2026, நவம்பர் 21 முதல் 23 வரை காலை 10.00 மணி முதலட மாலை 8.00 மணி வரை நடைபெறுகின்றது.

தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் தனித்துவமான நகைக் கண்காட்சி மற்றும் விற்பனையில் ஒன்றான ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026, அதன் 62வது பதிப்பை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி மிகவும் பிரத்யேகமானது, ஏனெனில் முதல் முறையாக இந்தக் கண்காட்சி, இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களின், இதுவரை கண்டிராத மிகச்சிறந்த நகை வடிவமைப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தும். ஆசியா ஜுவல்ஸ் ஷோ என்பது, பிரத்யேகமான மற்றும் உயர்தரமான, பிராண்டட் தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வில், ஃபைன் கோல்ட் ஜுவல்ஸ், டைமண்ட் ஜுவல்ஸ், பிளாட்டினம் ஜுவல்ஸ், பாரம்பரிய நகைகள், திருமண நகைகள், ஆன்டிக், விலைமதிப்புள்ள கற்கள் பதித்த நகைகள், குந்தன், ஜடாவ் ரூ போல்கி மற்றும் வெள்ளி நகைகள் போன்ற சில சமீபத்திய கலெக்ஷன்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

ஆசியா ஜுவல்ஸ் ஷோ நகரத்தின் மிகச்சிறந்த நகை கண்காட்சிகளில் ஒன்றாகும்.வரவிருக்கும் திருமணம் மற்றும் பண்டிகை காலத்திற்காக உங்கள் நகைகளை வாங்குங்கள் அல்லது முன்பதிவு செய்யுங்கள். இது போன்ற ஒரு கண்காட்சி, சில சிறந்த நகைகள், வடிவமைப்புகள் மற்றும் விலைமதிப்புள்ள கற்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் ஒரு முழுமையான இடமாகும். தென்னிந்தியாவில் நேர்த்தியான மற்றும் உலகத்தரம் வாய்ந்த நகைகளை வாங்குவதற்கு இது ஒரு சரியான இடமாகும்.

பெங்களூரு, மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஜோத்பூர் ஆகிய நகரங்களின் முன்னணி பிராண்டுகளின் ஆடம்பர நகை வடிவமைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு, அனைத்து பிராண்டட் நகைகளுக்கும் மிகவும் கவர்ச்சியான மற்றும் கண்கவர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நேர்த்தியான காட்சிக்கு மேலும் மெருகூட்டும் வகையில், இந்தியா முழுவதிலும் உள்ள முன்னணி பிராண்டுகளான கஜ்ராஜ் ஜுவல்லர்ஸ் (பெங்களூரு), ஜெய்ப்பூர் எம்போரியம் (ஜெய்ப்பூர்), சேகல் ஜுவல்லர்ஸ் (டெல்லி), ஷ்ரியன்ஸ் ஜுவல்ஸ் (டெல்லி), நேஹா கிரியேஷன்ஸ் (மும்பை), ஹவுஸ் ஆஃப் இபான் (மும்பை), சுமேரு வஜேரி (கோயம்புத்தூர்), டயமோர்ன் ஜுவல்லரி (மும்பை), குணு ஜெம்ஸ் (ஜெய்ப்பூர்), ரே வேரா டைமண்ட்ஸ் (மும்பை), பன்னா ஜுவல்லர்ஸ் (ஹைதராபாத்), லுவேரா ஜுவல்ஸ் (பெங்களூரு), ரேணுகா ஃபைன் ஜுவல்லரி (மும்பை), எம்கே ஜுவல்ஸ் (மும்பை), பிரதீப் போதார் ஜுவல்ஸ் (கொல்கத்தா), பாலாஜி ஜுவல்லரி (ஹைதராபாத்), கோயம் ஜுவல்ஸ் (மும்பை), ஸ்பானீரா ஜுவல்ஸ் (கோயம்புத்தூர்), சாண்டி ஷாப் (பெங்களூரு), சோய் ஓம்ப்ரே (ஹைதராபாத்) போன்றவற்றின் கண்கவர் சர்வதேச நகை வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. காரா (கோயம்புத்தூர்), எம்டி இம்பெக்ஸ் (ஹைதராபாத்), பாலாஜி பேர்ல்ஸ் (சென்னை) மற்றும் பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026 பற்றி: ஆசியா ஜுவல்ஸ் ஷோ என்பது ஹெச்ஆர்எஸ் மீடியாவால் உங்களுக்கு வழங்கப்படும் மிகவும் ஆடம்பரமான, நேர்த்தியான மற்றும் அதிகம் விரும்பப்படும் ஒரு நிகழ்வுக் கண்காட்சியாகும். கண்காட்சியைப் பற்றி மேலும் அறிய, 9620461919 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும் அல்லது https://hrsmedia.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

மேலும் படிக்க