November 20, 2026
தண்டோரா குழு
Kovaitil
கோவை பட்டணம் பகுதியில் உள்ள, “கார்ஸ் 327” நிறுவனம் சார்பில் யூஸ்டு கார்கள், 3வது மெகா யூஸ்டு கார் மாநில மாநாடு கோலாகலமாக துவங்கியது. அவிநாசி சாலை தொட்டி பாளையம் பிரிவு பகுதியில் துவங்கபட்ட இந்த மாநாட்டில் 1000த்திற்க்கும் மேற்பட்ட கார்கள் இடம் பெற்றுள்ளது.
கோவையில் யூஸ்டு கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு பயனளிக்கும் வகையில், சுமார் 1000″க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில், பார்த்து வாங்கும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக, 3வது, மெகா யூஸ்டு கார் மாநில மாநாடு அவிநாசி சாலை தொட்டி பாளையம் பிரிவு, பகுதியில் இன்று கோலாகலமாக துவங்கியது.
இந்த மாநாட்டை, மெகா வெல்டிங் ராட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.பி. அழகேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து இந்த மாநாடு குறித்து பேசிய கார்ஸ் 327 நிறுவனத்தின் நிறுவன தலைவர் விஸ்ணு வேணுகோபால்,
“கார்ஸ் 327” நிறுவனத்தின் சார்பாக, மூன்றாவது மெகா யூஸ்டு கார் மாநில மாநாடு இன்று துவங்கியுள்ளது இன்று முதல் வரும் 29ம் தேதி வரை,
காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில்,
பல்வேறு வகையான பயன்படுத்தப்பட்ட கார்களை, வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் பார்வையிட்டு, தங்களது தேவைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற காரை தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. என்று தெரிவித்தார்.
மேலும், கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும், சிறப்பு சர்விஸ் சலுகைகளும் இந்த மாநாட்டின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு, வழங்கப்படுவதாகவும், குடும்பத்துடன் வந்து கார்களை பார்வையிட்டு, விலை மற்றும் கார்களில் உள்ள வசதிகளை ஒப்பிட்டு பார்த்து, தங்களுக்கு பிடித்த காரை தேர்வு செய்யலாம் என்றார். இது வரையிலும் சுமார் 12 யூஸ்டு கார்மேளா நடத்தி உள்ளதாகவும் இது உங்களுக்காக, 13 வது மேளா எனவும், தமிழகத்தில் முதல் முறையாக ஆயிரம் கார்களுக்கும் மேலான கார்களை ஒரே இடத்தில் நிறுத்தி, மாநாடாக நடத்துவது,
இங்கு மட்டுமே என கூறியவர், கார்ஸ் 327 நிறுவனத்தின் சார்பாக எங்களிடம் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் சர்வீஸை இலவசமாக வழங்குவதோடு, கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு, பாஸ்ட்டேக் ஆயிரம் ரூபாய் காண ரிசார்ஜ் செய்து தருவதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட பைனான்ஸ் நிபுணர்கள் உள்ளதாகவும், எனவே உங்களுக்கு எந்த வங்கியில் பைனான்ஸ் பெற வேண்டுமோ அதனை முறையாக வழங்குவதாகவும் கூறினார்.
குறைந்த விலை கார்கள் முதல் உயர்ரக கார்கள் வரை இந்த மாநாட்டில், இடம் பெற்றுள்ளதாகவும், கார்களை விற்பனை செய்வதுடன் எங்களுடைய வேலை, முடிவடைவது இல்லை, எங்களது நிறுவனத்தில் கார்களுக்கு தேவையான ஒர்க்ஷாப்புகள், பெயிண்டிங் வேலைகள், ஆக்ஸஸரீஸ்கள், உதிரிபாகங்கள் என அனைத்தும் கிடைக்கும், ஆண்டு தோறும் கார்களுக்கு தேவையான இன்சூரன்ஸ் கார்களுக்கு போட்டு தரப்படும் என்றும் கூறினார்.
இந்த மாநாட்டில், வாடிக்கையாளர்களின் கார்களை நிறுத்த தனி பார்க்கிங் வசதிகள், கழிவறை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது என்றும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கார்ஸ் 327, என்றும் வாடிக்கையாளர்களுடன் துணை நிற்கும் என்றார்.