November 25, 2026
தண்டோரா குழு
டிவிஎஸ் குழுமத்தின் அங்கமும், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பில் உலகளாவிய முன்னணி நிறுவனமுமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ,, தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள தனது உற்பத்தி ஆலையிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒரு கோடி என்ற எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனம் என்ற மைல்கல்லை எட்டும் விதமாக ‘டிவிஎஸ் ஜூபிடர்’ ஸ்கூட்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்த மைல்கல் சாதனையின் மூலம், மொத்த உற்பத்தியில் ஒரு கோடி வாகனங்களை மிக வேகமாக எட்டிய இந்தியாவின் மிக இளைய ஸ்கூட்டர் பிராண்ட் என்ற பெருமையை டிவிஎஸ் ஜூபிடர் பெற்றுள்ளது.இது, நாட்டின் மிகவும் புகழ்பெற்ற, மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் இருசக்கர வாகன பிராண்டுகளில் ஒன்றாக அதன் இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளில், இந்தியாவின் வளர்ச்சியோடு இணைந்து பரிணாமம் அடைந்துள்ள ‘டிவிஎஸ் ஜூபிடர்’ , நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் அன்றாடப் பயணத்தில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. இந்த மைல்கல் சாதனை குறித்துப் பேசிய டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மக்கள் போக்குவரத்துப் பிரிவு, இந்திய இருசக்கர வாகனப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் அனிருத்தா ஹல்தார் “கடந்த பத்தாண்டுகளில் இந்திய மக்களின் மனநிலை ஒருசேர மாறியுள்ளது.
ஏதோ ஒன்று குறைவது போலிருக்கிறது என்ற மனநிலையிலிருந்து தன்னம்பிக்கை, வளர்ச்சி மற்றும் நிறைவு ஆகியவற்றை நோக்கி நாம் நகர்ந்துள்ளோம்; வாடிக்கையாளர்களும் தொடர்ந்து கூடுதலான அம்சங்களை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.’ஸியாதா’ என்ற தனது தத்துவத்தின் மூலம், மாறிவரும் இளம் இந்தியாவின் மற்றும் அதன் வளர்ந்து வரும் லட்சியங்களின் வடிவமாக ‘டிவிஎஸ் ஜூபிடர்’ (முக்கியத்துவம் பெற்ற்றிருக்கிறது.
ஒரு கோடி இந்தியர்களின் அன்றாடப் பயணத்தில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை டிவிஎஸ் ஜூபிடர் கொண்டு சேர்த்துள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் உருவாக்கியுள்ள நம்பிக்கையையும், வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள விசுவாசத்தையும் இந்தச் சாதனை வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும், எங்கள் ஊழியர்கள்,டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கடின உழைப்பையும், எங்களது பொறியியல் நிபுணத்துவம், உற்பத்தி திறன் மற்றும் விநியோகத் திறன்களின் வலிமையையும் இது எடுத்துக்காட்டுகிறது.
இந்தியா தொடர்ந்து முன்னேறி புதிய உச்சங்களை எட்டும் நிலையில், இன்னும் பல மைல்கல்கள் எங்களுக்காகக் காத்திருக்கின்றன என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் உள்ளேன்,” என்று தெரிவித்தார்.