• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடிப்பு

December 24, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியது. ஆனால், தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. நடா புயல் காரணமாக சென்னையில் ஓரளவுக்கு மழை பெய்தது. நடா புயலால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.

இதற்கிடையில், டிசம்பர் 10-ம் தேதி வங்கக் கடலில் வலுப்பெற்ற வர்தா புயல் 12-ம் தேதி சென்னையை நேரடியாகத் தாக்கியது. இதன் பாதிப்பு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்தமான் அருகே கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் அப்படியே நீடிக்கிறது. வலுப்பெறவும் இல்லை, வலு இழக்கவும் இல்லை.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வங்கக் கடலில் தெற்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் அப்படியே நீடிக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும். கனமழையாக இருக்காது. லேசானது முதல் மிதமழையாக இருக்கும். இன்று சனிக்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க