• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ்-ன் பிரத்யேக கைவினை நகைக் கண்காட்சி இன்று தொடக்கம்

July 16, 2026 தண்டோரா குழு

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கைவினை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்ட விழாக்கால மற்றும் மணமகள் நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தும் பிரத்யேக நகைக் கண்காட்சியை கோவையில் இன்று வியாழக்கிழமை தொடங்கியது.

அபர்ணா சுங்கு தேர்ந்தெடுத்து வடிவமைத்துள்ள இக்கண்காட்சி ஜூலை 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அவிநாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது.கண்காட்சியை கலாஷா ஃபைன் ஜுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரவண் குமார் குடூர் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் நகை ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், சி.என்.வி.டெக்ஸ்டைல்ஸ், வெள்ளியங்கிரி ஆண்டவர் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஸ்ரீ விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பத்மினி ராமமூர்த்தி, கௌமாரம் பிரசாந்தி அகாடமியின் நிறுவனர் தீபா மோகன்ராஜ், ஆஷா ராஜ்குமார், பிரிட்ஜ்வுட் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் வித்யாபிரபா, பிராட்வே மெகாப்ளெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த சங்கீதா சதீஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் விழாவில் பங்கேற்றனர்.

இந்தக் கண்காட்சியில் தங்கம், வைரம், போல்கி, ஜடாவ், கோயில் நகைகள் மற்றும் பழமையான வடிவமைப்பிலான ஆன்டிக் நகைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினை நகைத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்திய பாரம்பரிய நகைக் கலை நுட்பத்தையும் நவீன வடிவமைப்பையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒவ்வொரு நகையும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டுள்ள கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், இந்தியாவின் பாரம்பரிய நகைத் தயாரிப்பு கலையைப் பாதுகாத்து, அதனை நவீன அழகியலுடன் இணைக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மணமகள்களுக்கான பிரத்யேக நகைத் தொகுப்புகள், சிறப்பு நிகழ்வுகளுக்கான ஆடம்பர நகைகள் மற்றும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கக்கூடிய பாரம்பரிய வடிவமைப்புகள் இந்தக் கண்காட்சியின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து கலாஷா ஃபைன் ஜுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரவண் குமார் குடூர் கூறியதாவது:-

கோவை மக்களுக்காக எங்களின் பிரத்யேக கைவினை நகைக் கண்காட்சியை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய பாரம்பரியம், சிறந்த கைவினைத் திறன் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தியை பிரதிபலிக்கும் வகையில் எங்களின் ஒவ்வொரு நகையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணமகள் நகைகள், கோயில் நகைகள், வைர நகைகள் மற்றும் ஜடாவ் நகைகள் உள்ளிட்ட எங்களின் சிறப்பு தொகுப்புகளை கோவை மக்களிடம் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.”

கண்காட்சி ஜூலை 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாள்களும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், பிரத்யேக சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

மேலும் படிக்க