• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இருசக்கர வாகன வாங்குநர்களுக்கு மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை எளிதாகவும், அதிக பலன் தருவதாகவும் மாற்றும் நோக்கில் புதிய திட்டம் அல்ட்ராவைலட் நிறுவனம் அறிவிப்பு

July 16, 2026 தண்டோரா குழு

இந்தியாவில் பெட்ரோல் விலையேற்றம் தொடர்ந்து நுகர்வோருக்கு சுமையாக இருந்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள இருசக்கர வாகன வாங்குநர்களுக்கு மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை எளிதாகவும், அதிக பலன் தருவதாகவும் மாற்றும் நோக்கில் அல்ட்ராவைலட் நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

வாகனங்களை வாங்குபவர்கள் அதன் ஒட்டுமொத்த பராமரிப்புச் செலவை பெருகிவரும் அளவில் கணக்கிட்டு பார்க்கும் இந்தச் சூழலில், அல்ட்ராவைலட் நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் பொருளாதார மற்றும் செயல்திறன் நன்மைகளை வலுப்படுத்துவதோடு, இந்த மாற்றத்தை முன்பை விட அதிக லாபகரமானதாகவும் ஆக்குகிறது.

உயர்ந்து வரும் எரிபொருள் செலவுகளுக்கு மத்தியில்,அல்ட்ராவைலட் நிறுவனம் தனது புதிய ‘கில் தி பெட்ரோல் பில்’ திட்டத்தின் மூலம் இந்த மாற்றத்தை எளிதாக்குகிறது. அல்ட்ராவைலட் எஃப்77 அல்லது எக்ஸ்-47 வாகனங்களுக்கு மேம்படுத்தும் எந்தவொரு வாடிக்கையாளரும்,கடந்த 2 ஆண்டுகளில் தங்களது முந்தைய இருசக்கர வாகனத்தில் பயணித்த கிமீ தூரத்திற்கு இணையான பணத்தை கேஷ்பேக்காக பெறுவார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 20,000 கிமீ பயணம் செய்திருந்தால் ரூ.20,000 கேஷ்பேக்.

கூடுதலாக, எஃப்77 மற்றும் எக்ஸ்-47 வாகனங்கள், எரிபொருள் செலவில் மட்டும் ஒரு மாதத்திற்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை சேமிக்க ஓட்டுநர்களுக்கு உதவும்.இந்தத் திட்டத்தின் கீழ், வாகன ஓட்டிகள் தங்களின் முந்தைய பயண வரலாறு மற்றும் வாகனப் பயன்பாட்டின் அடிப்படையில்,அல்ட்ராவைலட் மோட்டார்சைக்கிளை வாங்குவதற்கு ரூ.30,000 வரை சலுகைகளைப் பெற முடியும். பெட்ரோல் வாகனங்களில் ஏற்கனவே பயணித்த கிலோமீட்டர்களை, புதிய வாகனம் வாங்குவதற்கான சலுகைகளாக மாற்றுவதன் மூலம், அல்ட்ராவைலட் நிறுவனம் மின்சார வாகனங்களின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்றை எடுத்துக்காட்டுகிறது.

இந்த அறிவிப்பு குறித்து அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான நாராயண் சுப்பிரமணியம் கூறுகையில், ”

மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும் என்ற நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இந்த திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள இருசக்கர வாகன வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், மிகக் குறைந்த இயக்கச் செலவு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறந்த வாகனப் பயன்பாட்டு அனுபவம் ஆகியவற்றைப் பெறுவதோடு, மிகுந்த தன்னம்பிக்கையுடன் இந்த மாற்றத்தை மேற்கொள்ள நாங்கள் வழிவகை செய்கிறோம்.

மின்சார வாகனத் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளுக்கு இந்த மாற்றத்தை எளிதானதாகவும் அதிக லாபகரமானதாகவும் மாற்றுவதன் மூலம், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதே எங்கள் முக்கிய இலக்காக தொடர்கிறது” என்றார்.

மேலும் படிக்க