• Download mobile app
15 Jul 2026, WednesdayEdition - 3808
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆடி அதிரடி யூஸ்டு கார் மேளா: ஒரே கூரையின் கீழ் 300+ கார்கள் – ஜூலை 16 முதல் 20 வரை

July 15, 2026 தண்டோரா குழு

கோவையில் ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “ஆடி அதிரடி யூஸ்டு கார் மேளா” திருவிழாவை கார்ஸ் 327 நிறுவனம் நடத்துகிறது.

இந்த ஐந்து நாள் சிறப்பு கண்காட்சி ஜூலை 16 முதல் 20 வரை, கோவை சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்ஸ் 327 நிறுவனத்தின் உரிமையாளர் விஷ்ணு வேணுகோபால்,

ஆடி மாத சிறப்பு தள்ளுபடிகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இந்த கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட தரமான யூஸ்டு கார்கள் ஒரே இடத்தில் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான பல்வேறு ரக கார்கள் விற்பனைக்கு உள்ளன.

மேலும், வாகனம் வாங்க விரும்புவோருக்கு உடனடி வங்கி மற்றும் தனியார் நிதி உதவி, இன்சூரன்ஸ், சர்வீஸ் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.வாடிக்கையாளர்கள் கார் வாங்கும் முன் தங்களது மெக்கானிக்கை அழைத்து வந்து முழுமையாக பரிசோதனை செய்து வாங்கலாம் என்றும், இது வாடிக்கையாளர்களுடனான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல்,வாடிக்கையாளர்களின் பழைய கார்கள் எந்த நிலையிலிருந்தாலும், அவற்றை மதிப்பீடு செய்து நல்ல விலையில் எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய கார் வாங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் படிக்க