• Download mobile app
28 Apr 2026, TuesdayEdition - 3730
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி – கருணாஸ் சந்திப்பு அரசியல் நகர்வா?

March 2, 2017 தண்டோரா குழு

அதிமுக திருவாடனை சட்டப் பேரவை உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியை அவரது இல்லத்தில் வியாழன்று சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு குறித்து கருணாஸ் செய்தியார்களிடம் பேசியதாவது:

‘பாட்ஷா’ படம் டிஜிட்டல் முறையில் வெள்ளிக்கிழமை (பிப். 3) வெளியாகிறது. அதற்கு வாழ்த்துச் சொல்ல அவரைச் சந்தித்தேன்.கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக கட்சியில் டிக்கெட் கிடைத்தபோது, ரஜினி சார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். இப்போது வெற்றியடைந்த பிறகு அந்த மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காகவும் அவரைச் சந்தித்தேன். அரசியல் குறித்து அவரிடம் பேசவில்லை.ட்விட்டரில் கமல் தெரிவித்துவரும் அரசியல் கருத்துகள் குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. ரஜினி ரசிகன் என்ற முறையில் அவரைச் சந்திக்க வந்துள்ளேன்.இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் கருணாஸ் ரஜினியைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க