• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ம.பியில் மரத்தை பராமரிக்க 12 லட்சம் ரூபாய் செலவு

July 13, 2017 தண்டோரா குழு

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் வளரும் அரச மரத்தை பாதுகாக்க அம்மாநில அரசு சுமார் 12 லட்சம் ரூபாய் செலவு செய்து வருகிறது.

கடந்த 3ம் நூற்றாண்டின் போது, புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் அல்லது அரச மரத்தின் ஒரு கிளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள அனுராதபுரத்தில் நடப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபாக்சே இந்திய வந்தபோது, அந்த மரத்தின் ஒரு பகுதியை மத்திய பிரதேச மாநிலத்தின் புத்த பல்கலைக்கழகம் அமைந்து உள்ள இடத்தில் அதை நட்டார்.

மத்திய பிரதேஷ் மாநில அரசு, அந்த அரச மரத்தை வளர்க்க சுமார் 12 லட்சம் ரூபாய் செலவு செய்து வருகிறது. அதை பாதுகாக்க நான்கு ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த மரத்திற்கு பிரத்தியோக தண்ணீர் தொட்டியும், ஒவ்வொரு வாரமும் மத்திய பிரதேஷ் மாநிலத்தின் விவசாய துறையின் தாவரவியல் நிபுணர்கள், அதன் வளர்ச்சியையும் சீரான நிலையையும் சரி பார்த்து வருகின்றனர்.

ஊர்காவல் படை பரமேஷ்வர் திவாரி கூறுகையில்,

“கடந்த 2௦12ம் ஆண்டு, நான் இங்கு பணியில் சேர்ந்தேன். நான்கு ஊர்காவல் படையினர் இங்கு இருக்கின்றனர். முன்னதாக, பல மக்கள் இங்கு வந்து சென்றனர். ஆனால், தற்போது, வெகு சிலரே வருகின்றனர்” என்றார்.

மேலும் படிக்க