• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தில் முன் விரோதம் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு 4 பேர் கைது

August 28, 2023 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் (30).இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சச்சின் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் சிறுமுகை ரோடு ஸ்ரீ ரங்கராயன் ஓடை அருகே கந்தவேல் மது அருந்திக்கொண்டு நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சச்சின், திலீப், கவின், விக்கி மற்றும் விபின் பிரசாத் ஆகியோர் மது போதையில் கந்தவேலிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

அப்பொழுது சச்சின் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளையை எடுத்து கந்தவேலை கை மட்டும் இடுப்பு பகுதிகளில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த கந்தவேல் கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சச்சின், தீலிப், விக்கி, விபன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
சச்சினின் அக்கா வர்ஷினி பிரியா கொலை செய்யப்பட்டு இறந்த சம்பவத்தில் கந்தவேலுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு பலி தீர்க்கவே சச்சின்,கந்தவேலை கத்தியால் வெட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க