• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தில் “கிராம தங்கல்” திட்டம் – உழவர் சந்தையை பார்வையிட்ட மாணவிகள்

April 5, 2024 தண்டோரா குழு

வாணவராயர் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் “கிராம தங்கல்” திட்டத்தின் ஒரு பகுதியாக உழவர் சந்தை மேட்டுப்பாளையத்தில் பார்வையிட்டனர்.

நிர்வாக அலுவலர் ஷர்மிளா,வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் மற்றும் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். அங்கு சுவர் ஓவியமாக காய்கறிகளின் பயன்பாடுகளை தீட்டி உள்ளனர் மிகவும் பயனாக உள்ளது.

இங்கு விவசாயிகளுக்கு இலவசமாக எடையிடும் மின்னணு தராசு,மேடை தராசு ,குளிர் சேமிப்பு கிடங்கு ,பேருந்து வசதி,மீண்டும் மஞ்சப்பை துணிப்பை இயந்திரம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அவரையில் மூக்குத்தி அவரை, சிறகு அவரை, தம்பட்டை அவரை மற்றும் டபுள் பீன்ஸ் மாணவிகள் புதிதாக தெரிந்து கொண்டார்கள். மேட்டுப்பாளையம் உழவர் சந்தை பயன்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமையப்பெற்றது.

மேலும் படிக்க