• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய எம்.பி.

January 4, 2017 தண்டோரா குழு

கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கிய சம்பவம் அம்மாநிலம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை (ஜனவரி 3) கூறியதாவது:

கர்நாடக பாஜக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டே. அவரது தாயார் உடல்நலக் குறைவால் சிரசி என்னும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது அங்கு வந்திருந்த ஹெக்டே, தனது தாயாரை மருத்துவமனை ஊழியர்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்று கோபம் கொண்டு மருத்துவமனை ஊழியர்களையும், ஒரு செவிலியரையும் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் அம்மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. எனினும், சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை அடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க