• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மடிக்கும் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்

March 16, 2017 தண்டோரா குழு

‘சாம்சங்’ நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களின் தயாரிப்புப் பணிகள் நடப்பு ஆண்டில் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

2௦17ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த போனை தென் கொரியாவின் பெரிய நிறுவனமான ‘சாம்சங்’ நிறுவனம் தயாரிக்கத் தொடங்கும்.

“செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கும் ஐஏஎப் 2௦17 விழாவில் மடிக்கும் வசதி கொண்ட ‘ஸ்மார்ட் போன் கியூ 3 2௦17’ அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுவாக சாம்சங் நிறுவனம் ‘காலக்ஸி நோட்ஸ்’ ரக ஸ்மார்ட் போனைகள் அறிமுகப்படுத்துவது வழக்கம். மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை மக்களுக்கு வழங்குவது தவிர்க்க முடியாதது” என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அந்த நிறுவனம் மடிக்கும் வசதி கொண்ட சாதனத்தைத் தயாரிப்பதற்கான காப்புரிமையைப் பெறுவதற்கு கொரியாவில் பதிவு செய்திருந்தது. பாதியாக மடிக்கும் வசதிக்கொண்ட இந்த சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ‘கேலக்ஸி X’ என்னும் ஸ்மார்ட் போனில் மற்ற ஸ்மார்ட் போனிலுள்ள ‘பேக் பட்டன்’ இடது புறத்திலும் வலது புறத்தில் ‘மெனு பட்டன்’, நடுவில் சாம்சுங் ‘ஹோம் பட்டன்’ இருக்கும்.

மேலும் படிக்க