• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பகுதியில் பேருந்தில் பறிகொடுத்த 34 1/2 சவரன் தங்க நகையை மீட்ட கோவை மாவட்ட காவல்துறையினர்

October 10, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் தங்கலெட்சுமி(50) என்பவர் கடந்த 05.10.2024 அன்று அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று விட்டு பொள்ளாச்சிக்கு பேருந்தில் வந்து பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது அவரது தங்க நகையான 34 1/2 சவரன் தங்க நகை , ரூபாய் 1000/-மற்றும் செல்போன்-1 ஆகியவற்றை தவற விட்டுச் சென்றுள்ளார். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,உத்தரவிட்டதன்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு வந்ததில் கோவை to பொள்ளாச்சி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா மகன் முருகன் (50) என்பவர் 34 1/2 சவரன் தங்க நகைகளுடன் பிடிபட்டார்.

இந்நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் மேற்படி நபரை கைது செய்து அவரிடமிருந்து மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட 34 1/2 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபரின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212‌ மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க