• Download mobile app
01 Aug 2026, SaturdayEdition - 3825
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி அருகே குழந்தைகளுடன் தாய் தற்கொலை

September 16, 2017 தண்டோரா குழு

பொள்ளாச்சி அருகே கணவன் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி செல்லமுத்து நகரை சேர்ந்தவர் ராஜேஸ்.இவர் பனியன் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்னரை வயதில் பவின் பவேஷ் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வித்யா குந்தைகளுடன் வீட்டில் இருந்த போது நீண்ட நேரம் கதவு திறக்காததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை திறந்து பார்த்த போது வித்யா தூக்கில் தொங்கியபடியும் குழந்தைகள் இருவரும் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் மூவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்ற போது குழந்தைகளும் வித்யாவும் இறந்து விட்டனர்.குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு வித்யாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

தற்கொலைக்கு செய்து கொள்வதற்கு முன்பு வித்யா கணவர் ராஜேஸ்க்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் “நான் எத்தனை முறை தனிக்குடித்தனம் செல்லலாம் என அழைத்தும் வரவில்லை.இப்ப நாங்க போறோம் நீ மட்டும் தனியாக இருக்க போறீயா குழந்தைகளை தனியாக விட்டு போக முடியல அதனால தான் கூட்டிட்டு போறேன். நீ என்னை உண்மையாக காதலிக்கவில்லை அதனாலதான் என் பேச்சை கேட்டகல இனி நீ சந்தோஷமாக இரு எங்க அப்பா அம்மாவை நல்லா பாத்துக்க எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மேற்கு காவல்நிலைய போலீசார் கடிதத்தை கைப்பற்றி தற்கொலைக்கு உண்மையான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க