September 27, 2026
தண்டோரா குழு
காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில், சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் அன்னை சாரதா நடமாடும் மருத்துவப் பிரிவு சார்பில் நடைபெற்ற முகாமை, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய பேராசிரியர் முனைவர் ஜெய்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் தம்பு முன்னிலை வகித்தார்.
மருத்துவர் நந்தகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். செவிலியர் ராணி மற்றும் தன்னார்வலர்கள் தீலிப், சாய்கணேஷ், விஷ்ணு ஆகியோர் முகாமில் பங்கேற்றனர்.
பெள்ளாதி கிராம பொதுமக்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.முகாமை பள்ளி முதல்வர் இராஜேஸ்வரி,துணை முதல்வர் ரேவதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கவிதா மற்றும் உதவித் திட்ட அலுவலர் கபிலர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.