September 27, 2018
தண்டோரா குழு
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது என ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று நடத்துவதற்காகவும், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காக 6 பேர் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண துணிச்சலாகவும், புதுமையாகவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் இந்த விருது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட 6 பேர் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு சம்பியான்ஸ் ஆஃப் தி எர்த் என்ற விருதை அறிவிக்கபட்டுள்ளது. அதைபோல் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு சூரியசக்தி மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட கொச்சி விமானநிலைதிற்க்கும் விருது வழங்கப்பட உள்ளது என ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.