• Download mobile app
04 Jul 2026, SaturdayEdition - 3797
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய ஜல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் –முக ஸ்டாலின்

January 19, 2017 தண்டோரா குழு

தமிழக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தேவையான புதியதொரு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் அனைத்துக் கட்சிப் பிரநிதிகளையும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்தித்திருந்தால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வைப் பிரதமரிடம் வெளிப்படுத்தியிருக்க முடியும்.

தமிழகமெங்கும் தன்னெழுச்சியுடன் மாணவர்களும், மக்களும் நடத்தும் போராட்டத்தின் உணர்வுகளை மத்திய அரசு உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு கைவிரித்து விட்ட நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஓர் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தையும் கூட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான புதியதொரு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டத்தை அதில் நிறைவேற்ற வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க