• Download mobile app
03 Jul 2026, FridayEdition - 3796
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தறி புடவைகள் , பாரம்பரிய ஆடைகளின் பிரத்தியேக தொகுப்புகளுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் தநைரா அறிவிப்பு

July 3, 2026 தண்டோரா குழு

டாடா குழுமத்தின் தயாரிப்பான தநைரா தனது பிரத்தியேகத் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மிக நேர்த்தியான கைத்தறிப் புடவைகள் மற்றும் பாரம்பரிய ஆடைத் தொகுப்புகளை மிகவும் சாதகமான விலையில் வாங்கி மகிழ்வதற்கான ஒரு அருமையான வாய்ப்பாகும்.

இந்தச் சிறப்புத் தள்ளுபடி விற்பனை குறித்து தநைரா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் முதன்மை அதிகாரி பேசுகையில்,

“தநைராவின் ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவின் செழுமையான நெசவுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, அசல் புடவைகளும், ஆடைத் தொகுப்புகளும் உருவாக்கப்படுகின்றன. இந்த சீசன் தள்ளுபடி விற்பனையின் மூலம், எங்களது கைத்தறிப் புடவைகள் மற்றும் ஆடைத் தொகுப்புகளின் பிரத்தியேக உலகத்தை வந்து அனுபவிக்குமாறு வாடிக்கையாளர்களை அன்போடு அழைக்கிறோம்,” என்றார்.

ஜூலை 1 முதல் தொடங்கியுள்ள இந்தச் சிறப்பு விற்பனையின் மூலம், தநைராவின் அனைத்துக் விற்பனை நிலையங்களிலும் மற்றும் இணையதளத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட புடவைகளுக்கு 40% வரையிலும், குர்தாக்கள் மற்றும் குர்தா செட்களுக்கு 50% வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ‘என்சர்க்கிள்’ உறுப்பினர்கள் இந்தத் தள்ளுபடி விற்பனையின் முதல் ஐந்து நாட்களில் கூடுதல் 5% தள்ளுபடியைப் பெற்று மகிழலாம். வரவிருக்கும் திருமணங்கள், பண்டிகைக் காலங்கள் மற்றும் விசேஷக் கொண்டாட்டங்களுக்கு எப்போதும் நினைவில் நிலைத்திருக்கும் பாரம்பரிய ஆடைகளை வாங்க விரும்புபவர்களுக்கு இந்தத் தள்ளுபடி விற்பனை ஒரு அட்டகாசமான வாய்ப்பாகும்.

நாடு முழுவதும் உள்ள முன்னணி நெசவுக் கூட்டமைப்புகளிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட ஏராளமான கைத்தறி ஆடைகளின் தொகுப்புகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் காஞ்சீவரம், பனாரசி, சவுத் சில்க், டஸ்ஸர், ஜம்தானி, சம்பல்புரி, இக்கத், சந்தேரி, மகேஸ்வரி, கோட்டா டோரியா உள்ளிட்ட பல பாரம்பரியப் புடவை வகைகள் இடம் பெற்றுள்ளன.

அடுத்தடுத்து வரவிருக்கும் திருமணங்கள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தங்களைத் தயார்படுத்தி வரும் வேளையில், தநைராவின் இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனை தூய மற்றும் இயற்கை நூலிழைகளால் நெய்யப்பட்ட புடவைகள், நேர்த்தியான குர்தாக்கள், குர்தா செட்கள், பிளவுஸ்கள் மற்றும் தைக்கப்படாத ஆடைத்தயாரிப்புகளை ஒரே இடத்தில். இங்குள்ள ஒவ்வொரு தூய பட்டுப் புடவையும் ‘சில்க் மார்க்’ சான்றிதழ் பெற்றது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடைத் தொகுப்புகள் அவற்றின் தரத்தை உறுதிப்படுத்தும் ‘ஜரி சான்றிதழையும்’ கொண்டுள்ளன.

மேலும் படிக்க