July 3, 2026
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி 21வது வார்டு சங்கரா மருத்துவமனை அருகில் சிவானந்தபுரம், விளாங்குறிச்சி ரோடு,கணபதி மாநகர் சுற்று பகுதி களில் சுமார் 6,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்காக 24 லட்சம் லிட்டர் மற்றும் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மிகப்பெரிய குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குடிநீர் மேல்நி லைத் தொட்டிகளுக்கு இடையில், மாநகராட்சியின் 20 வார்டுகளில் சேகரிக்கப் படும் திடக்கழிவுகளைதரம் பிரிக்கும் மையம் அமைப் பதற்காக கட்டுமான பணி களுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று மாலை அப்பகுதி மக்கள் பணிகள் நடக்கும் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மா.கம்யூ சார்பில் முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
குப்பைகள் கொண்டு வரப்பட்டால் கடுமையான துர்நாற்றம், “பொதுமக்களுக்கு குடி நீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிகளுக்கு இடை யில் குப்பைத் தரம் பிரிப்பு மையம் அமைப்பது, அவர் களின் அடிப்படை வாழ்வு ரிமையை பாதிக்கும். குடி நீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத் திற்கு மிகப்பெரிய அச்சுறுத் தலாக அமையும். 20 வார் ஈ,கொசு, எலி மற்றும் உயிரினங்கள் பெருகும். இதன் மூலம் டெங்கு, மலேரியா, சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் பரவும். குடிநீர் ஆதாரம் மாசுபடும் அபாயம் உள்ளது. மக்களின் உடல்நலம் பாதிக்கப்படும்.
அருகிலேயே மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் குடியி ருப்புகள் உள்ளன.இதற்கு நடுவே மத்தியில் குப்பை மையம் அமைப்பது ஏற்க முடியாது. எனவே குப்பை தரம் பிரிப்பு மையம் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளையும் கைவிட வேண்டும். மக் கள், உள்ளாட்சி அமைப்பு களுடன் கலந்தாலோசித்து மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது
இந்த கூட்டத்தில் 21 வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரம், 11 வார்டு சிரவை சிவா என்கின்ற பழனிசாமி.9 வார்டு சரஸ்வதி.20 வார்டு மரியராஜ்.25 வார்டு தவமணி பழனியப்பன்.26 வார்டு அம்பிகா தனபால் மற்றும் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகிய கலந்து கொண்டனர்.