• Download mobile app
07 Jul 2026, TuesdayEdition - 3800
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிறுவனத்தின் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி ஆக்சிஸ் மேக்ஸ் லைப் சாதனை

July 7, 2026 தண்டோரா குழு

ஜூன் 30, 2026 நிலவரப்படி தன் வசம் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை எட்டி ஒரு மாபெரும் வணிக சாதனையைப் படைத்துள்ளதாக ஆக்சிஸ் மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 8 சதவீத வளர்ச்சியாகும்.நிறுவனத்தின் சிறப்பான முதலீட்டு முறை, வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறை மற்றும் தொடர்ச்சியான வணிக வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக இந்த சாதனை எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைகளை அளிந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள், பரவலான விநியோகம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகள் போன்றவற்றால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.பல ஆண்டுகளாக,அரசுப் பத்திரங்கள், கார்ப்பரேட் பாண்டுகள்,பங்குகள்,ரியல் எஸ்டேட் மற்றும் பிற மாற்று முதலீட்டு நிதிகளில் கவனமாக முதலீடு செய்வதன் மூலம் நிறுவனம் நிலையான முதலீட்டுக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக,நிறுவனத்தின் கடன் சார்ந்த முதலீடுகளில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவை அரசின் பாதுகாப்பான மற்றும் மிகவும் நம்பகமான பத்திரங்களிலேயே தொடர்ந்து முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களின் பணத்தின் பாதுகாப்பையும் நீண்ட கால லாபத்தையும் உறுதி செய்வதை காட்டுகிறது.

மேலும், பொறுப்பான முதலீட்டு அணுகுமுறையின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொறுப்புகளையும் தனது முதலீட்டுக் கட்டமைப்பில் நிறுவனம் இணைத்துள்ளது.

இது குறித்து ஆக்சிஸ் மேக்ஸ் லைப் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி சச்சின் பஜாஜ் கூறுகையில்,

“நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியிருப்பது, பல ஆண்டுகளாக எங்கள் மீது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முதலீட்டு முடிவும், வாடிக்கையாளர்களின் நீண்ட கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடனேயே எடுக்கப்படுகிறது.

நாங்கள் தொடர்ந்து வளரும்போது, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதிலும், அவர்களின் நிதிப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் உறுதியாக இருப்போம்,” என்று கூறினார்.

2026 நிதியாண்டின் பொதுத் தரவுகளின்படி, ஆக்சிஸ் மேக்ஸ் லைப் தனிநபர் முதல் வருட பிரீமியத்தில் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.9,885 கோடியை எட்டியுள்ளது.
இதன் மூலம் தனியார் சந்தையில் இதன் பங்கு 10.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அத்துடன் 2026 நிதியாண்டில் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக 99.8 சதவீத தனிநபர் இறப்பு உரிமைகோரல்களை வழங்கி உள்ளது. அதாவது, ரூ.1,641 கோடி மதிப்பிலான 20,529 தனிநபர் இறப்பு கோரிக்கைகளுக்கு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க