July 6, 2026
தண்டோரா குழு
வெளிநாட்டு நாணய வைப்புநிதிகள் மூலம் அதிக அளவில் வெளிநாட்டுப் பணத்தை ஈர்க்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய கொள்கைகளை அறிவித்தது.
இதற்கு ஏற்ப, உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் வங்கி தனது 3 முதல் 5 ஆண்டுகளுக்கான அமெரிக்க டாலர் வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 7.50% ஆக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி உயர்வு, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சிறந்த பலன் அளிக்கும் என்றும் அதே வேளையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கும் இது ஆதரவாக இருக்கும் என்றும் இவ்வங்கி நம்புகிறது.
இந்த வட்டி உயர்வு குறித்து உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகாரி ஹித்தேந்திர ஜா கூறுகையில்:
“ரிசர்வ் வங்கியின் இந்த புதிய திட்டம், வங்கித் துறையில் நிலையான வெளிநாட்டு பணத்தை ஈர்ப்பதற்கும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு மிக முக்கியமான முயற்சியாகும். இந்த நோக்கத்திற்கு ஏற்ப, உஜ்ஜீவன் வங்கி தனது 3 முதல் 5 ஆண்டுகளுக்கான வெளிநாட்டு நாணய வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 7.50% ஆக உயர்த்தியுள்ளது.
தற்போது வங்கித் துறையில் வழங்கப்படும் மிகச் சிறந்த வட்டி விகிதங்களில் இதுவும் ஒன்றாகும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு லாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதோடு, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மைக்கான பங்களிப்பை இந்த வட்டி உயர்வு காட்டுகிறது,” என்றார்.இந்த வட்டி விகிதத்தின் மூலம், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் முதலீடுகளை அதிகரிக்கவும், நீண்டகால வெளிநாட்டு நாணய வைப்புநிதிகளை அதிக அளவில் திரட்டவும் உஜ்ஜீவன் வங்கி திட்டமிட்டுள்ளது.
மேலும், இது நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டுப் பொருளாதாரத் துறையை வலுப்படுத்தும் என்றும் உறுதிபட நம்புகிறது.