• Download mobile app
04 Jul 2026, SaturdayEdition - 3797
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையின் முதல் முழுமையான கருத்தரிப்பு மையமான “PSG Fertility 360°” திறப்பு விழா – பொதுமக்களுக்கான சிறப்பு பட்டிமன்றம்

July 4, 2026 தண்டோரா குழு

PSG மருத்துவமனை சார்பில்
கோவையின் முதல் முழுமையான கருத்தரிப்பு மையமான “PSG Fertility 360°” இன்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கருத்தரிப்பு சிகிச்சைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் Andrology (ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சை), IVF (செயற்கை கருத்தரிப்பு), Reproductive Medicine, Male & Female Fertility Evaluation, Embryology, Fertility Preservation, கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் முழுமையான மலட்டுத்தன்மை சிகிச்சைகள்* அனைத்தும் ஒரே கிளையின் கீழ் வழங்கப்படுகின்றன.

PSG மருத்துவமனையின் B Block Auditorium-இல் நடைபெற்ற இந்த விழாவில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழா பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றுதலுடன் தொடங்கியது. PSG Super Specialty Hospitals இயக்குநர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து சிறுநீரகவியல் மற்றும் Andrology நிபுணர் டாக்டர் கிருஷ்ணமோகன் மற்றும்
IVF நிபுணர் டாக்டர் ஆதிலட்சுமி ஆகியோர் PSG Fertility 360° மையத்தின் சிறப்புகளை விளக்கினர்.ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மைக்கான முழுமையான பரிசோதனை, நவீன IVF சிகிச்சைகள், ஆண் கருத்தரிப்பு பிரச்சினைகளுக்கான Andrology சேவைகள், Fertility Preservation உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒரே மையத்தில் கிடைப்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும் என்று தெரிவித்தனர்.

விழாவிற்கு PSG விஷ்ணுகிராந்தி இயக்குநர் டாக்டர் கே.பானுமதி தலைமை வகித்தார்.
PSG College of Nursing முதல்வர் டாக்டர் ஆர். ஜெயதீபா மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் Nursing Superintendent டாக்டர் அனுராதா வாழ்த்துரை வழங்கினர்.Endo Gynaecologist டாக்டர் எஸ்.விஷ்ராந்தி நன்றியுரை வழங்கினார்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக,
“குழந்தைச் செல்வங்கள் தாமதமாவது – சுய விருப்பமா? அல்லது காலத்தின் கட்டாயமா?”
என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தாமதமான திருமணம், மாறிவரும் வாழ்க்கை முறை, மனஅழுத்தம், உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், ஆண் மலட்டுத்தன்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விரிவாக விளக்கமளித்தனர். கருத்தரிப்பு பிரச்சினைகளில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் சம அளவில் பரிசோதனை அவசியம் என்பதையும், ஆண் மலட்டுத்தன்மைக்கான Andrology பிரிவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

PSG Fertility 360° மூலம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய IVF ஆய்வகம், Andrology சேவைகள், அனுபவமிக்க மருத்துவ நிபுணர்கள் மற்றும் நோயாளி மையப்படுத்தப்பட்ட முழுமையான கருத்தரிப்பு சிகிச்சைகள் இனி கோவையிலேயே கிடைக்கப்பெறவுள்ளன.

மேலும் படிக்க