• Download mobile app
07 Jul 2026, TuesdayEdition - 3800
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி 17-வது மாணவர் மன்ற பதவியேற்பு விழா

July 7, 2026 தண்டோரா குழு

கோவை கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளியின் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத்தின் (Student Council) 17வது பதவியேற்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் எம்.எஸ்.ஜி.மேனன் தலைமை தாங்கினார்; அவருடன் பள்ளியின் தலைவர் என்.அருள் ரமேஷ்,தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மற்றும் முதல்வர் டாக்டர் பூனம் சியால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் மாணவர் தலைவராக (Head Boy) தன்மய்,மாணவிகள் தலைவராக (Head Girl) ருஹின் பண்டாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர், மாணவியர் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமான பட்டைகள் (sashes) மற்றும் பதக்கங்கள் (badges) அணிவிக்கப்பட்டன.பின்னர் அவர்கள் தலைமைத்துவத்திற்கான உறுதிமொழியை ஏற்றனர். நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் பள்ளியின் விழுமியங்களைக் காப்பதாக அவர்கள் உறுதியேற்றனர்.

நிகழ்வில் ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றிய ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் எம்.எஸ்.ஜி.மேனன், உண்மையான தலைமைத்துவம் என்பது நற்பண்பு, ஒழுக்கம், மன உறுதி மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது என அறிவுறுத்தினார். மாணவர்கள் முன்மாதிரியாகத் திகழவும், வெற்றிக் காலங்களில் பணிவுடன் இருக்கவும், ஒவ்வொரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளவும் அவர் ஊக்குவித்தார்.

மேலும்,அன்றாட அனுபவங்கள் மற்றும் தாங்கள் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து உத்வேகம் பெறுமாறும், ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு மதிப்புமிக்க பாடத்தை வழங்கக்கூடியவை என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வு முழுவதும் வெளிப்பட்ட சிறப்பான செயல்பாட்டு உணர்வை (spirit of excellence) அவர் வெகுவாகப் பாராட்டினார்.பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்ட இவ்விழா,தலைமைத்துவத்தைக் கொண்டாடியதுடன்,தேசபக்தி மற்றும் பொறுப்புணர்வுடன் மாணவர்கள் சிறந்து விளங்கவும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்வதாக இருந்தது

மேலும் படிக்க