• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன் – 12 வருடமாக விரதம் இருக்கும் கேரள பெண் !

October 15, 2018 தண்டோரா குழு

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இந்த நடைமுறையினை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வரலாற்று தீரப்பினை வழங்கியது. உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையில், தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி முதல் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதைபோல் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு சிறப்பாக மேற்கொள்ளும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இத்தீர்ப்பினை எதிர்த்து கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவனந்தபுரத்தில் கள்ளிப்பாலம் பகுதியிலும், இடுக்கியிலும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.
எனினும், தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றாலும், அதேமாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த்(32) என்பவர், சபரிமலை செல்வதற்காக இருமுடி கட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,

நான் கடந்த 12 வருடமாக ஒவ்வொரு வருடமும் மண்டல காலத்தில் 41 நாட்கள் ஐயப்பனுக்காக விரதம் இருந்து வருகிறேன். ஆனால் என் வயது பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்பதால், விரதம் மட்டும் இருப்பேன், மலைக்கு சென்றதில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில், இந்த வருடம் வழக்கம்போல விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல இருக்கிறேன். எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தாரும், உறவினர்கள் இருக்கிறார்கள்.இன்று நான் தனியாக இருக்கலாம், ஆனால் வரும் காலங்களில் நிறைய பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என நம்புகிறேன். கடவுளை தர்சிப்பதில் ஆண்-பெண் பாகுபாடுகள் இருக்ககூடாது. எனது முடிவுக்கு அரசும், மக்களும் ஆதரவு அளிக்குமாறு கோரியுள்ளார்.

மேலும் படிக்க