• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அறிவிப்பு

April 17, 2024 தண்டோரா குழு

ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியை ஆதரித்து இன்று களமாடி கொண்டிருப்பதாக குறிப்பட்ட அவர், பா.ஜ.க.வை விட்டு வெளியே வந்த பிறகு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று முழுமையாக துண்டித்துக் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.
பிஜேபியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் தங்களை இரண்டாவது பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று கருதுவதாக கூறிய அவர், ஆனால் இங்கு தொடர்ந்து திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

பிஜேபி என்கிற நாசகார பாசிச கும்பல் தமிழ்நாட்டிலே வேரூன்றி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் அ.தி.மு.க. பி.ஜே.பி.யை விட்டு வெளியே வந்த உடனே அவர்களை சந்தித்து ஆதரவு கூறியதாக தெரிவித்தார்.அ.தி.மு.க. தங்களுடைய பழைய தவறுகளை திருத்திக் கொண்டு அம்மையார் ஜெயலலிதா 1999 இல் அறிவித்தது போல இனிமேல் எங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள் அதை கூடுமானவரை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள் பல்வேறுபட்ட அழுத்தங்கள் அவர்களுக்கு இருந்தாலும் அந்த அழுத்தங்களை மீறி அவருடைய இன்றைக்கு தனித்தன்மையோடு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே தான் ஐக்கிய முஸ்லிம் கழகம் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி அமைத்த பிறகு,என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாக நடந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மின்சார கட்டணம் மாதா மாதம் வசூலிக்கப்படுவதாக கூறிய உறுதிமொழியை இதுவரை நிறைவேற்றவில்லை எனவும்,அதே போல வீட்டு வரியை பலமடங்கு உயர்த்தியுள்ளதால் சாதாரண மக்கள் பாதிக்கபட்டு வருவதாக கூறினார்.

அதுபோன்று பால் விலை ஏற்றம், நாங்க வந்தால் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையையும் டீசல் விலை மானியம் கொடுப்போம் என்பன போன்ற பல திட்டங்களை அறிவித்தார்கள் ஆனால் எதையும் தி.மு.க.அரசு இது வரை செய்யவில்லை என குற்றம் சாட்டினார். எனவே பா.ஜ.க.மீது அ.தி.மு.க.வின் நிலையான எதிர்ப்பை வரவேற்று இந்த நாடாளுமன்ற தேர்தலி்ல் எங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த சந்தப்பின் போது ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஹாலிதீன்,செய்யாறு அப்பாஸ், ரஃபி, நசீர், வசீர் அகமத், பாபு என்கிற ஜாஹிர், நிஷாத் ,சித்திக் ,இப்ராஹிம், வெள்ளலூர் சித்தீக், நியாஸ், முகமது ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க