September 27, 2018
தண்டோரா குழு
நாக்கை அறுப்பேன் என்ற வார்த்தை வாய் தவறி வந்துவிட்டது என்று வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் அண்மையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துறைண்ணு, தமிழக அரசுவறட்சியிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ்., தஞ்சை மண்ணின் மைந்தன் வைத்திலிங்கம் இருக்கும் வரை இந்த ஆட்சியை, கட்சியை எவராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் என பேசினார்.
இதையடுத்து அமைச்சரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நாக்கை அறுப்பேன் என்ற வார்த்தை வாய் தவறி வந்துவிட்டது. யாரையும் தனிப்பட்ட முறையில் பேசவில்லை, அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என அமைச்சர் துரைகண்ணு கூறியுள்ளார்.