• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடைப்பயிற்சியின் போது பெண்ணை தரதரவென இழுத்து செயினை பறிக்க முயற்சி

May 15, 2023 தண்டோரா குழு

கோவையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்று அப்பெண்ணை தரதரவென இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா.இவர் இன்று காலை ஜீவி ரெசிடென்சி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார்.அந்நிலையில் அவரை வெள்ளை கார் ஒன்று பின் தொடர்ந்து வந்துள்ளது.அப்போது கௌசல்யாவிற்கு அருகில் வரும்போது காரில் இருந்த மர்ம நபர்கள் கௌசல்யா கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளனர்.

அப்போது கௌசல்யா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் சிறிது தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து அந்த கார் அப்பகுதியில் நிற்காமல் சென்றுவிட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க