• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நகைக்கடையின் கூரையை உடைத்து திருட்டு

June 13, 2017 தண்டோரா குழு

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் நகைக்கடையில் கூரையை உடைத்து சுமார் 40 சவரன் வரை தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை.

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியில் நகைக்கடை வைத்திருப்பவர் துரைராஜ், இவர் வழக்கம் போல் நேற்று இரவு தனது நகைக்கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை 10 மணிக்கு கடையை திறந்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரை மற்றும் உள்ளிருந்த சட்டர் உடைந்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையில் கம்மல், மூக்குத்தி, செயின், வளையல் உள்ளிட்ட சுமார் 40 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக்கடையின் கூரையை உடைத்து திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க