• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோலம்பாளையத்தில் 21ம் தேதி கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

June 2, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தோலம்பாளையம் கிராமம், திப்பாதேவி கோவில் திருமண மண்டபத்தில் வரும் 21ம் தேதி காலை 11 மணியளவில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

இதனை அடுத்து வரும் 7ம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் தோலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்களிடம் முன்மனுக்களை பெற உள்ளார். பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுக்கலாம்.

மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 21ம் தேதி தோலம்பாளையம் கிராமம் திப்பாதேவி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார்.

மேலும் படிக்க