• Download mobile app
24 May 2026, SundayEdition - 3756
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி.மு.க. புதிய இளைஞரணி செயலாளர் மு.பெ. சாமிநாதன்

January 6, 2017 தண்டோரா குழு

திமுக இளைஞரணியின் புதிய செயலராக முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ. சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.திமுக இளைஞரணிச் செயலராக இருந்த மு.க. ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,

“தி.மு.க. இளைஞரணி செயலாளராக மு.பெ. சாமிநாதனும், இணைச் செயலாளராக சுப. சந்திரசேகரும் நியமிக்கப்படுகிறார்கள். கட்சியின் சட்ட விதி 18, 19 பிரிவுகளின் கீழ் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உள்ள இளைஞரணி துணைச் செயலாளர்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

புதிய இளைஞர் அணிச் செயலாளர் மு.பெ. சாமிநாதன் 2006-11 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை மற்றும் பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க