• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜார்கண்ட் ஆளுநருக்கு கேஎம்சிஹெச் சார்பில் பாராட்டுவிழா மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.2.11 கோடி நிதி வழங்கும் விழா !

July 6, 2023 தண்டோரா குழு

சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கோவை நகருக்கு வருகை தந்தார்.அப்போது அவருக்கு கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் ஒரு பாராட்டுவிழா ஜூலை6 அன்று கேஎம்சிஹெச் கலையரங்கில் நடத்தப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவர்.K.அண்ணாமலை கௌரவ விருந்தனராக கலந்துகொண்டார். கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு நன்கொடையாக ரூ.2.11 கோடியை காசோலையாக ஜார்கண்ட் மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தனது பாராட்டுரையில்,

ராதாகிருஷ்ணன் கோவையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் என்ற முறையிலும் கோவையின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகளைப் பாராட்டினார்.பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்ததைக் குறிப்பிடும்போது கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் இதற்கு முன்னர் செய்யப்பட்ட சமுதாய மேம்பாட்டு பணிகளை அவர் நினைவுகூர்ந்தார்.

குறிப்பாக கொரோனோ பெருந்தொற்று காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இரண்டு கோடி ரூபாய் நன்கொடை அளித்தது,கோவை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ . 10 இலட்சம் மதிப்புக்கு பாதுகாப்பு கவச ஆடைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் 2000 லிட்டர் சானிடைசர் வழங்கியது. புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் கடந்த 25 ஆண்டுகளாக மாரத்தான் நிகழ்ச்சி நடத்திவருவது, அண்டை மாநிலம் கேரளா வெள்ளத்தால் தத்தளித்தபோது அவசர கால மருத்துவ முகாம்கள் நடத்தியது,கஜா புயலால் பாதித்த மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தியது முதலானவற்றை அவர் குறிப்பிட்டார்.

மேலும் பெண்கள் உடல் நலம் பேணும் வகையில் பெண்கள் உடல்நல மையங்கள் அமைத்தது,சுவிட்ச் பாரத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு இலவச கழிப்பறைகள் காட்டிக்கொடுத்தது. கிராமப்புற மாணவர்கள் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தது, புற்றுநோயால் அவதிப்படும் ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிப்பது ,கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது,டைப் 1 வகை நீரிழிவு நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பிராஜக்ட் கதிர்,என்ற திட்டத்தின் மூலம் கோவை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இதயங்கள் அறக்கட்டளை தேவையான மருத்துவ உதவிகள் அளித்தது, கோவில்களுக்கு கட்டிடம் சீரமைத்தல் மற்றும் ஆண்டு விழாக்களுக்கு உதவுதல் முதலானவை கேஎம்சிஹெச் முன்னெடுத்த சமுதாய நலன் மேம்பாட்டு முயற்சிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

பல்வேறு சமுதாய நலப் பணிகளுக்காக கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் இதுவரை ரூ.16.21 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க