• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் இருந்து புதிய விமான சேவை – ஏர் இந்தியா

August 23, 2017 தண்டோரா குழு

சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு புதிய விமான சேவையை தொடங்கப் போவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து ஏர் இந்தியா விமான நிறுவன இயக்குனர் கேப்டன் அருள்மணி கூறுகையில்,

“பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்க வேண்டும்,
அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள் இயக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதால்,இந்த சேவையை தொடங்கவுள்ளோம்.

மேலும் இந்த விமான சேவையை ஏர்இந்தியாவின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு வருகிற 30-ந் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளோம்.இந்த விமான சேவையில் 70 பயணிகள் பயணம் செய்யும் வகையில் சிறிய ரக விமானம் இயக்கப்பட உள்ளது.

இந்த விமான சேவை ஒரு நாளையில் ஒரு நகரத்திற்கு ஒரு முறை மட்டுமே அளிக்க இயலும் எனவும்,மேலும் சிறிய ரக விமானங்கள் வந்த பின்னர் காலை, மாலை என தினமும் இரண்டு முறை விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க