• Download mobile app
13 Aug 2026, ThursdayEdition - 3837
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சந்திரா ஹூண்டாய் ஷோரூம்களில் சிறப்பு சலுகை!

August 12, 2026 தண்டோரா குழு

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய ஹூண்டாய் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் மற்றும் ரூ.1 லட்சம் வரை சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என சந்திரா ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாட்டின் 80-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் அருகே உள்ள சந்திரா ஹூண்டாய் ஷோரூமில் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நிறுவனத்தின் பொது மேலாளர் மணிகண்ட வாசகன்,அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

சுதந்திர தினத்தை முன்னிட்டு சந்திரா ஹூண்டாயின் லட்சுமி மில், சின்னியம்பாளையம், பொள்ளாச்சி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட அனைத்து ஷோரூம்களிலும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
ஹூண்டாய் கிரெட்டா, ஆரா, வென்யூ, i20, i10, அல்கசார், எக்ஸ்டர் உள்ளிட்ட பல்வேறு ஹூண்டாய் கார் மாடல்களுக்கு இந்த சிறப்பு சலுகைகள் பொருந்தும்.
வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களில் கார்களை முன்பதிவு செய்து இந்த சலுகைகளைப் பெறலாம்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஷோரூம்கள் விடுமுறையாக இருக்கும் என்பதால், அன்றைய தினம் தொலைபேசி வாயிலாகவும் கார் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சலுகை ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை தொடரும் எனவும் கூறப்பட்டது.
புதிய கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் மற்றும் ரூ.1 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,சந்திரா ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து ஷோரூம்களிலும் சர்வீஸ் சென்டர்கள் செயல்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு அசல் உதிரி பாகங்களைக் கொண்டு தரமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் மணிகண்ட வாசகன் தெரிவித்தார்.

அதேபோல், ஹூண்டாய் நிறுவனத்தின் “சம்மன்” (Samaan) திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி, தங்களுக்கு பிடித்த ஹூண்டாய் கார்களை சிறப்பு சலுகைகளுடன் வாங்கிச் செல்லுமாறு சந்திரா ஹூண்டாய் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க