• Download mobile app
21 May 2026, ThursdayEdition - 3753
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை விபத்தில் 24 பள்ளி மாணவர்கள் பலி

January 19, 2017 தண்டோரா குழு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 19) நடந்த சாலை விபத்தில் 24 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து லக்னோ காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இதா மாவட்டத்தில் ஜே.எஸ். பொதுப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளி வாகனத்தில் 6௦ மாணவ மாணவிகள் பயணம் செய்தனர். அப்பள்ளி வாகனத்தின் மீது வேகமாக வந்த சரக்கு வண்டி மோதியதில் 24 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு மூடுபனியே முக்கிய காரணம்.

மோசமான வானிலை காரணமாக அம்மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. ஆனால், ஜே.எஸ். பொதுப்பள்ளி மட்டும் இயங்கியுள்ளது. எனவே, அது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் தனது ட்விட்டரில், “உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் இதா மாவட்டத்தில் நடந்த இச்சம்பவம் எனக்கு அதிக வேதனையைத் தருகிறது. குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்” என்றார்.

மேலும் படிக்க