• Download mobile app
02 Oct 2026, FridayEdition - 3887
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை லக்ஷ்மி மில்ஸ் வளாகத்தில் ஜப்பானிய இகெபானா பாணியில் நவராத்திரி கொலு” – ‘சங்கல்பம்’ 2 நாள் கலைக் கண்காட்சி தொடக்கம்..!

October 2, 2026 தண்டோரா குழு

கோயம்புத்தூர், அக்டோபர் 2, 2026 -​நவராத்திரி விழாவை முன்னிட்டுத் பாரம்பரியக் கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலாச்சார நினைவுகளை ஒன்றிணைக்கும் ‘சங்கல்பம்’ பண்பாட்டுக் கண்காட்சி கோவை லக்ஷ்மி மில்ஸ் நகர்ப்புற மையத்தில் இன்று சிறப்பாகத் தொடங்கியது.

தெய்வீகப் பெண்மையின் சக்தி, படைப்பாற்றல் மற்றும் மீள்திறனைக் கொண்டாடும் வகையில் இக்கண்காட்சி ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ண பரிஜாதாவின் விஜயலட்சுமி ருத்ரப்பன், ஹல்தி குங்குமத்தின் அபிஷேக் எஸ். மூர்த்தி, ஆரா டிசைனின் அபர்ணா வெங்கடேஷ் மற்றும் சரண்யா கோகினேனி ஆகியோரின் கூட்டுப் பங்களிப்பில் இக்கண்காட்சி கருத்தாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

​தென்னிந்திய பாரம்பரிய சடங்குகள், மலர்க் கலைகள், கைத்தறி நெசவு, பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்டவை இந்தக் கண்காட்சியின் முதன்மை அம்சங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
​ஜப்பான் ‘இகெபானா’ பாணியில் புதுமையான கொலு மற்றும் இந்தியா முழுவதும் சுமார் 21 தேவி சிலைகள் குழு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நவராத்திரி கொலுவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஜப்பான் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற ஓக்கா மீனாட்சி தேவி மற்றும் அவரது குழுவினர் சிறப்புப் பங்காற்றி உள்ளனர்.
​ஜப்பானிய பாரம்பரிய மலர் அலங்கார முறையான ‘இகெபானா’ (Ikebana) நுட்பத்தைப் பயன்படுத்தி, நவீனக் கலாச்சாரமும் நமது தென்னிந்திய மரபும் இணையும் வகையில் இக்கொலு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மூங்கில்கள், இயற்கைச் செடிகள், பூக்கள் மற்றும் சாமி சிலைகளுக்கான பிரத்யேக மாலை அலங்காரங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன.

​
இக்கண்காட்சி குறித்து ஏற்பாட்டாளர்
விஜயலட்சுமி ருத்ரப்பன் கூறுகையில்

​”நமது முன்னோர்களின் மாபெரும் கட்டிடக் கலை மற்றும் பாரம்பரியக் கொலு பொம்மை செய்யும் கைவினைஞர்களின் எண்ணிக்கை தற்காலத்தில் குறைந்து வருகிறது. வருமானக் குறைவு காரணமாக அடுத்த தலைமுறையினர் வேறு தொழில்களுக்குச் சென்று விடுகின்றனர்.

​நமது பாரம்பரியக் கைவினைப் பொருட்களுக்கு உலகளாவிய தேவையை உருவாக்கி, அலைந்து திரியும் அந்தப் பாரம்பரியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். வீடுகளைப் புதிய முறையில் அழகுபடுத்த நினைப்பவர்களுக்கு இக்கண்காட்சி மிகச் சிறந்த யோசனைகளை வழங்கும் எனவும் இந்த கண்காட்சியானது கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் ஒரு முயற்சியாக இருக்கும் எனவும்

​இன்றும் நாளையும் அனுமதி எனவும்
அக்டோபர் 2 மற்றும் 3 (இன்றும் நாளையும்) ஆகிய இரு தினங்கள் மட்டும் நடைபெறும் இக்கண்காட்சிக்குக் கோவை பொதுமக்கள் திரளாக வருகை தந்து, பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இணைந்த இந்த தெய்வீகக் கலை அனுபவத்தைப் பெற்றுச் செல்லுமாறு அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்து உள்ளனர்.

இந்த நிகழ்வை சங்கல்பத்தை, கிருஷ்ண பரிஜாதாவின் விஜயலட்சுமி ருத்ரப்பன், ஹல்தி குங்குமத்தின் அபிஷேக் எஸ். மூர்த்தி, ஆரா டிசைனின் அபர்ணா வெங்கடேஷ் மற்றும் சரண்யா கோகினேனி ஆகியோர் கருத்தாக்கம் செய்துள்ளனர்.

இவர்களது கூட்டுப் படைப்பு, தென்னிந்திய மரபு, சடங்குகள், மலர்க் கலை, இந்தியக் கைவினை மற்றும் சமகால வடிவமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க