• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி கமிஷனர் ஜெர்மனி செல்கிறார்

September 25, 2023 தண்டோரா குழு

ஜெர்மன் நாட்டின் ஹில்டிஷைம் நகரில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெறும் ஜெர்மன் மற்றும் ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை சம்பந்தமான கருத்தரங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பங்கேற்க உள்ளார்.

கோவை மாநகரம் மற்றும் ஜெர்மனியிலுள்ள எஸ்லிங்கன் நகருக்கும் 2016 முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி இரு நகரங்களும் கலாச்சாரம், தொழில்நுட்ப, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.தற்போது ஜெர்மனி நாட்டில் ஹில்டிஷைம் என்ற நகரில் ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை சம்பந்தமான கருத்தரங்கம் செப்டம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் பங்கேற்க கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஜெர்மன் நாட்டிற்கு செல்கிறார். வருகின்ற செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1ம் தேதி வரை ஜெர்மனி நாட்டிற்கு சென்று வர தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் படிக்க